டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது
சமூகப் புரிதல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக செயற்கரிய சேவையாற்றிய தனிநபர் அல்லது சேவை அமைப்புகளுக்கான உயரிய விருது
இதை வழங்குவோர்இந்திய அரசு
நாடுஇந்தியா Edit on Wikidata
வெகுமதி(கள்) 1 மில்லியன்
முதலில் வழங்கப்பட்டது1993
கடைசியாக வழங்கப்பட்டது2014
Highlights
இதுவரை விருது பெற்றோர்கள்7
முதல் விருதாளர்தேசிய சமூகப்பணி மற்றும் சமூக அறிவியல் நிறுவனம், புவனேஷ்வர்
கடைசி விருதாளர்பாபு லால் நிர்மல் & அமர் சேவா சங்கம்
இணையதளம்ambedkarfoundation.nic.in

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது அல்லது நலிந்த பிரிவினரின் சமூக புரிதல் மற்றும் மேம்பாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது என்பது நாட்டின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியலமைப்பின் தந்தையும், மனித உரிமைகள் போராளியுமான பி. ஆர். அம்பேத்கரின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள விருதாகும். [1] [2] [3]

வரலாறு[தொகு]

இந்த விருது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் மக்கள் அல்லது அமைப்புகளுக்கு அவர்களின் சிறந்த பணிகளை கௌரவிக்கும் விதமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்த விருது பாபாசாகேப் அம்பேத்கரின் சமூக புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையை அடையாளப்படுத்துகிறது. இந்த விருதின் தொகையானது 1 மில்லியன் (10 இலட்சம் ) ரூபாய் மற்றும் ஒரு சான்றிதழாகும். இந்த விருது இந்தியக் குடியரசுத் தலைவரின் கைகளால் வழங்கப்படுகிறது. [4]

விருது பெற்றவர்கள்[தொகு]

பின்வரும் நபர்கள் அல்லது அமைப்புகள் (அ) நிறுவனங்கள் இந்த விருதைப் பெற்றுள்ளன.

ஆண்டு நபர் அல்லது அமைப்பு இடம் வகை
1993 தேசிய சமூகப்பணி மற்றும் சமூக அறிவியல் நிறுவனம் புவனேஸ்வர், ஒடிசா ஒரு அமைப்பு
1994 ராயத் சிக்ஷன் சன்ஸ்தா சதாரா, மகாராஷ்டிரா ஒரு அமைப்பு
1996 இராமகிருசுண இயக்கம் ஆசிரமம் மத்திய பிரதேசத்தின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள நரேன்பூர் ஒரு அமைப்பு
1998 கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வேதாரணியம், தமிழ்நாடு ஒரு அமைப்பு
2011 சுகதேயோ தோரட் மகாராட்டிரம் நபர்
2012 சமதா சைனிக் தளம் மகாராஷ்டிரா ஒரு அமைப்பு
2014 பாபு லால் நிர்மல் &
அமர் சேவா சங்கம் [5]
இராசத்தான்
தமிழ்நாடு
நபர் மற்றும்
அமைப்பு

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]