டாக்டர். அம்பேத்கர் நகர்
டாக்டர். அம்பேத்கர் நகர்
மாவ் இராணுவப் பாசறை நகரம் | |
---|---|
இராணுவப் பாசறை நகரம் | |
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் மாவ் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°33′N 75°46′E / 22.55°N 75.76°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | இந்தூர் |
பெயர்ச்சூட்டு | அம்பேத்கர் |
ஏற்றம் | 556 m (1,824 ft) |
மக்கள்தொகை (2011[1]) | |
• மொத்தம் | 85,023 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 453441 |
தொலைபேசி குறியீடு | 07324 |
டாக்டர். அம்பேத்கர் நகர் (Dr. Ambedkar Nagar - commonly known as Mhow), பொதுவாக மாவ் நகரம் என அழைக்கப்படும் இந்நகரம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தூர் நகரத்திற்கு தென்மேற்கே 23 கிமீ தொலைவில், பழைய மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை எண் 3-இல் அமைந்துள்ளது. இவ்வூரில் அம்பேத்கர் பிறந்ததால், அவரின் நினவை போற்றும் வகையில், மாவ் நகரத்தின் பெயரை, 2003-இல் மத்தியப் பிரதேச அரசு டாக்டர். அம்பேத்கர் நகரம் என மாற்றியது. [3] இந்நகரத்தின் நிர்வாகத்தை இந்திய இராணுவத்தின் குடும்பத்தினர்கள் கொண்ட பாசறை மன்றக் குழு மேற்கொள்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, டாக்ட. அம்பேத்கர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 81,702 ஆகும். அதில் ஆண்கள் 43,888 மற்றும் 37,814 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9308 (11.39%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.78% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 66.54%, இசுலாமியர் 29.41%, சமணர்கள் 0.45%, பௌத்தர்கள் 0.54%, கிறித்தவர்கள் 1.55%, சீக்கியர்கள் 1.32% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர். [4]
இராணுவப் பாசறைகளும், இராணுவப் பயிற்சி கல்லூரிகளும்
[தொகு]1818 முதல் இந்நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் இராணுவப் பாசறை உள்ளது. தற்போது இந்நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மூன்று இராணுவப் பயிற்சி நிலையங்கள் உள்ளது. அவைகள்: 1 மாவ் இராணுவப் பொதுப் பள்ளி, 2 இராணுவப் போர்க் கல்லூரி, 3 இராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரி.
புகழ் பெற்றவர்கள்
[தொகு]பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள்
[தொகு]- டாக்டர். அம்பேத்கர் சமுக அறிவியல் பல்கலைக்கழகம்
- கால்நடை மருத்துவக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
- ↑ "Mhow town renamed as Dr Ambedkar Nagar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Bhopal). 28 June 2003 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023043527/http://articles.timesofindia.indiatimes.com/2003-06-28/india/27179994_1_bhopal-notification-madhya-pradesh-government.
- ↑ Mhow Cantt Population Census 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- "Mhow". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- Mhow cantonment
- Mhow Ki Khabrein - A blog dedicated to Mhow