டாக்சோபிளாஸ்மோசிஸ்
Toxoplasmosis | |
---|---|
T. gondii tachyzoites | |
சிறப்பு | Infectious disease |
அறிகுறிகள் | Often none, during pregnancy (birth defects)[1][2] |
காரணங்கள் | Toxoplasma gondii[3] |
சூழிடர் காரணிகள் | Eating poorly cooked food, exposure to infected cat feces[3] |
நோயறிதல் | Blood test, amniotic fluid test[4] |
சிகிச்சை | During pregnancy spiramycin or pyrimethamine/sulfadiazine and folinic acid[5] |
நிகழும் வீதம் | Up to 50% of people, 200,000 cases of congenital toxoplasmosis a year[6][7] |
நச்சு ஊனீர் மிகை (Toxoplasmosis) என்பது ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இது டாக்சோபிளாசுமா கோண்டீ ஒட்டுண்ணித் தொற்றால் ஏற்படுகிறது.[3] இவ்வகைத் தொற்றுகளால் பலவகை நரம்புளவியல், நடத்தை நிலைமைகள் உருவாகின்றன.[8] அவ்வபோது மென் நிணநீர்க்கணுவும் சதைவலியும் கொண்ட மெல்லிய காய்ச்சல் சில வாரங்களுக்கு ஏற்படலாம்.[1]
இந்நோயில் மைய நரம்பு மண்டலம்,கண், இதயம், நுரையீரல், அண்ணீரகம் போன்றவை தாக்கமடையும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்திலும்,விழித்திரையிலும் ஒட்டுண்ணி காணப்படும். மூளையில் நீர்ப்பைகளும்,கால்சியப் படிவும் காணப்படும். தண்டுவடத் தாக்கமும் இருக்கலாம். பெறப்பட்ட நோயில் நிணக்கணுக்கள், மண்ணீரல், கல்லீரல், இதயச் தசை ஆகியன தாக்கமடையும்.
அறிகுறிகள்
[தொகு]பெரும்பாலும் மூளை பாதிக்கப்படுவதால், நீர்க்கபாலமோ, குறுங்கபாலமோ, தோன்றும். வலிப்பு, கைகால் நடுக்கம், செயலிழப்பு, விழி ஊசலாட்டம், விழித்திரை அழற்சி ஆகியவை காணப்படும். தண்டுவடநீர் மஞ்சள் நிறமாகப் புரதம் மிகுந்து உட்கருச் செல்களுடன் காணப்படும். வீங்கிய கல்லீரலும், காமாலையும், குறைந்த திராம்போசைட்டும் , மிகு குருதிப் புள்ளிகளும் காணப்படும்.
மருத்துவம்
[தொகு]கண்கள் தாக்கமுறும்போதும் தடுப்பாற்றல் தன்மை குறையும்போதோ மருத்துவம் அளிக்கவேண்டிவரும். சல்போனமைடு 6 மணி நேரத்துக்கு ஒரு முறை 1 கிராமும், பைரிமிதமைன் நாளும் 25 மி.கிராமும் 2-6 வாரங்களுக்குத் உட்கொள்ளவேண்டும். [9]
மேற்காேள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Parasites – Toxoplasmosis (Toxoplasma infection) Disease". July 10, 2014. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ Hunter, CA; Sibley, LD (November 2012). "Modulation of innate immunity by Toxoplasma gondii virulence effectors". Nature Reviews Microbiology 10 (11): 766–78. doi:10.1038/nrmicro2858. பப்மெட்:23070557.
- ↑ 3.0 3.1 3.2 "Parasites – Toxoplasmosis (Toxoplasma infection) Epidemiology & Risk Factors". March 26, 2015. Archived from the original on 23 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ "Parasites – Toxoplasmosis (Toxoplasma infection) Diagnosis". January 10, 2013. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ "Parasites – Toxoplasmosis (Toxoplasma infection) Resources for Health Professionals". April 14, 2014. Archived from the original on 13 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ Torgerson, Paul R; Mastroiacovo, Pierpaolo (2013). "The global burden of congenital toxoplasmosis: a systematic review". Bulletin of the World Health Organization 91 (7): 501–508. doi:10.2471/BLT.12.111732. பன்னாட்டுத் தர தொடர் எண்:0042-9686. பப்மெட்:23825877.
- ↑ "Toxoplasmosis—a global threat. Correlation of latent toxoplasmosis with specific disease burden in a set of 88 countries". PLOS ONE 9 (3): e90203. March 2014. doi:10.1371/journal.pone.0090203. பப்மெட்:24662942. Bibcode: 2014PLoSO...990203F. "Toxoplasmosis is becoming a global health hazard as it infects 30–50% of the world human population.".
- ↑ "Toxoplasma gondii: An Underestimated Threat?". Trends in Parasitology 36 (12): 959–969. December 2020. doi:10.1016/j.pt.2020.08.005. பப்மெட்:33012669. "Accumulating evidence suggests that latent infection of Toxoplasma gondii is associated with a variety of neuropsychiatric and behavioral conditions.".
- ↑ "டாக்சாேபிளாஸ்மாேசிஸ்". அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 12 சூலை 2017.