உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்சோடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்சோடியம் டிசுட்டிரிக்ககம்

சதுப்பு ஊசியிலை மரம் (swamp cypress) (Taxodium distichum) அல்லது வழுக்கை ஊசியிலை மரம் பிரெஞ்சு மொழி: cyprès chauve அல்லது சிப்ரே Louisiana) என்பது ஓர் இலையுதிரும் ஊசியிலை மரவகையாகும். இது குரெசாசியே குடும்பத்தில் அமைந்த தாவர இனமாகும். இது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும். வன்மையும் விறைப்பும் உள்ள இந்த மர இனம், ஈரமான, உலர்ந்த, சதுப்பான பலவகை மண்வகைகளிலும் வளர்கிறது.இது சிவந்த துருநிற ஊசியிலைகலை உதிர்ப்பதால் கவனம் பெற்ற மரமாகும்.

இது வளர்ப்பினங்களைக் கொண்டுள்ளது[1][2][3][4][5] இது பொதுவெளியில் குழுக்குழுவாக நடப்படுகிறது. இதன் பொதுப் பெர்களாக வழுக்கை ஊசியிலை மரம், சதுப்பு ஊசியிலை மரம்,, வெண் ஊசியிலஈ மரம், ஓதநீர் சிவப்பு ஊசியிலை மரம், வளைகுடா ஊசியிலை மரம், சிவப்பபஊசியிலை மரம் என்பன அமைகின்றன.[6][7]

வழுக்கை ஊசியிலை மரம் உலூசியானாவின் மாகாண அரசின் மரமாக ஐக்கிய அமெரிக்க மாநில மரங்களில் அலுவவல் முறையில் 1963 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.[8]

வகைப்பாடு

[தொகு]

தாவரவியல் பெயர் : டாக்சோடியம் டிசுட்டிரிக்கம் 'Taxodium distrchum'

குடும்பம் : டாக்ஸோடிசியீ (Taxoidaceae)

பிற பெயர்கள் : வழுக்கை ஊசியிலை சதுப்பு ஊசியிலை, மூட்டு ஊசியிலை.

விவரிப்பு

[தொகு]

இம்மரம் சதுப்பு நிலத்தில் வளர்கிறது. இது 25 முதல் 100 அடி உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போல் உள்ளன. இதன் அடிப்பகுதி முட்டுக் கொடுப்பது போல் 10 அடி சுற்றளவிற்கு வேர் பருத்துள்ளது. சதுப்புப் பகுதியில் உயிரகம்(ஒட்சிசன்) வேருக்கு கிடைப்பதில்லை. இதனால் காற்றுறிஞ்சி வேர்கள் ஆகாயத்தை நோக்கி வளர்கின்றன. ஒவ்வொரு வேரும் ஒரு அடி நீண்டு அடிப்பெருத்தும் நுனி சிறுத்தும் இருக்கும். இவ்வேரின் நுனியில் துவாரம் உள்ளது. இதன் வழியாக காற்று உட்புறம் செல்கிறது. இதனால் உயிரகம் கிடைக்கிறது. இம்மரத்தின் அடிப்பகுதி 10 அடி உயரத்திற்கு மென்மையான சோற்றது திசுக்கள் உள்ளது. முதிர்ச்சியடைந்த மரத்தின் அடிப்பகுதி வெற்றிடமாக உள்ளது. இம்மரம் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ளது. இம்மரம் படகு செய்ய பயன்படுகிறது. இவற்றில் மூன்று இன மரங்கள் உள்ளன. இவை மெக்சிகோவில் வளர்கின்றன. இவ்வகை மரங்கள் நெடுங்காலம் உயிர் வாழ்கின்றன. டாக்சோடியம் மூக்குருனேட்டம் என்கிற மரம் ஒசாக்கா என்கிற இடத்தில் 4000 ஆண்டுகளாக உள்ளது. இது 165 அடி உயரமும் 40 அடி விட்டமும் கொண்டுள்ளது. 112 அடி சுற்றளவு உடையதுரீது உலகில் இரண்டாவது பெரிய சுற்றளவு கொண்ட மரமாகும்.[9] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taxodium distichum". Natural Resources Conservation Service PLANTS Database. USDA.
  2. Farjon, A. (2005). Monograph of Cupressaceae and Sciadopitys. Royal Botanic Gardens, Kew. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84246-068-4
  3. வார்ப்புரு:EFloras
  4. வார்ப்புரு:Gymnosperm Database
  5. வார்ப்புரு:Silvics
  6. "Bald-cypress | The Morton Arboretum". www.mortonarb.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  7. "Baldcypress Tree on the Tree Guide at arborday.org". www.arborday.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.
  8. Calhoun, Milburn; Frois, Jeanne (31 May 2006). Louisiana Almanac, 2006-2007 (17th ed.). Pelican Publishing. p. 431. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58980-307-7.
  9. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்சோடியம்&oldid=3778047" இலிருந்து மீள்விக்கப்பட்டது