டாக்கா மத்திய சிறை
Appearance
டாக்கா மத்திய சிறை (Dhaka Central Jail) வங்காளதேசத்தின் கேரனிகஞ்ச் துணை மாவட்டத்தில் இருக்கும் ராசேந்திரபூர் கிராமம், தேகாரியா ஒன்றியத்தில் அமைந்துள்ளது. [1] 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று இச்சிறை திறக்கப்பட்டது. [2][3] டாக்கா மத்திய சிறை 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 4590 சிறைக் கைதிகளை சிறை வைக்கமுடியும். [4] 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழைய டாக்கா மத்திய சிறையிலிருந்த கைதிகள் 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இங்கு மாற்றப்பட்டனர். [5][6] சிறை திறக்கப்பட்டதில் இருந்து இச்சிறையில் எரிவாயு இணைப்புகள் இல்லாமல் விறகு பயன்படுத்தி உணவு சமைக்க வேண்டிய சிக்கல், மோசமான நீர் இணைப்புகள் மற்றும் பார்வையாளர் மையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inmates of Dhaka Central Jail being shifted to new prison at Keraniganj". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2016/07/29/inmates-of-dhaka-central-jail-being-shifted-to-new-prison-at-keraniganj.
- ↑ "Dhaka Central Jail relocation completes" (in en). Daily Sun. http://www.daily-sun.com/post/155001/Dhaka-Central-Jail-relocation-completes.
- ↑ Human Rights in Bangladesh: A Report by Ain O Salish Kendra, Bangladesh Legal Aid and Services Trust, [and] Odhikar (in ஆங்கிலம்). University Press Limited. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-984-32-0847-7.
- ↑ "New Dhaka Central Jail at Keraniganj inaugurated". bdnews24.com. 10 April 2016. http://bdnews24.com/bangladesh/2016/04/10/new-dhaka-central-jail-at-keraniganj-inaugurated.
- ↑ "Dhaka jail prisoners shifted to Keraniganj jail". The Daily Star. 30 July 2016. http://www.thedailystar.net/city/prisoners-being-shifted-newly-built-keraniganj-central-jail-1261288.
- ↑ "Dhaka Central Jail to be shifted to Keraniganj by June". Dhaka Tribune. 28 January 2015. http://www.dhakatribune.com/bangladesh/2015/01/28/dhaka-central-jail-to-be-shifted-to-keraniganj-by-june/.
- ↑ "Prisoners face multiple woes in new Dhaka Central Jail". The Financial Express (Dhaka). http://www.thefinancialexpress-bd.com/2016/08/05/40954/Prisoners-face-multiple-problems-in-new-Dhaka-Central-Jail.