டவோலாரா நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kingdom of Tavolara
Regno di Tavolara
நுண் நாடு
கொடி of டவோலாரா
கொடி
சின்னம் of டவோலாரா
சின்னம்
டவோலாராஅமைவிடம்
நிலைசெயல்படா நிலை
தலைநகரம்La Punta del Canone[1]
ஆட்சி மொழி(கள்)சார்தீனியம், இத்தாலியம்
இனக் குழுகள்
இத்தாலியர்
மக்கள்டவோலாரியர்
நிறுவன வகைமுடியாட்சி
கிசுபி பெர்டோலொனி
இரண்டாம் பாலோ
நிறுவுதல்
• அறிவிப்பு
1836
பரப்பு கூறப்படும்
• மொத்தம்
5 km2 (1.9 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
57

டவோலாரா நாடு (Kingdom of Tavolara) என்பது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சார்தீனியாவின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள தவோலாரா தீவில் சுதந்திரம் பெற்ற சிறிய மிக சிறிய முடியாட்சி ஆகும். இது இத்தாலியின் சார்டினியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவு. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டு மொத்த பரப்பளவு ஐந்து சதுர கிலோமீட்டர்தான். இந்த இராஜ்ஜியம் சார்டினியாவின் மன்னர் கார்லோ ஆல்பர்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட பெர்டிலோலினிய குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது. இது உலகின் மிகச் சிறிய ராஜ்யங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

1861 இல் இத்தாலிய அரசாங்கம் 1868 ஆம் ஆண்டில் செயல்பட ஆரம்பித்த ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க தீவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நிலத்திற்கு 12,000 லயர் செலுத்தியது.[2][3]

இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் எண்ணிக்கை வெறும் பதினொன்றுதான். இந்த நாட்டை ஓர் அரசர் ஆளுகிறார். ஓட்டல் ஒன்றின் உரிமையாளரான இந்த அரசர் சாதாரண சட்டை, இரப்பர் செருப்புடன் காணப்படுகிறார். டவோலாரா நாட்டின் அரசரின் பெயர் டோனினோ பெர்டோலியோனி. டவோலோராவுக்கு சென்றால் அரசரை பார்க்க அரண்மனைக்கு போக தேவை இல்லை.எவ்வித முன் அனுமதியும் இன்றி அவரைச் சந்தித்து விடலாம் .ஆடம்பரமில்லாமல் எளிமையாக காட்சியளிக்கும் அரசரே தீவின் ஒரே ஓர் உரிமையாளர். சுற்றுலா பயணிகளுக்கு படகு ஒட்டு பவரும் அவரே.

வரலாறு[தொகு]

180 வது நிறுவன தினத்தை கொண்டாடும் டோனினோவின் பூர்விக பாட்டானர் குசெப் பெர்டோலியோனி , சகோதிரிகளான இருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சார்டினியாவின் ஓர் அங்கமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807 ம் ஆண்டில் இத்தாலியில் இருந்து இந்த தீவில் குடியேறினார்.

ஜெனோவா நகரில் வசித்து வந்த குசெப் பெர்டோலியோனி, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகளைப் பற்றி தெரிந்துக்கொண்டார். இந்த அறிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டும்தான் வசிக்க கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சார்டினியாவின் மன்னர் கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் டவோலாரா தீவுக்கு வந்தார். 1836 ம் ஆண்டில் டவோலாரா தீவுக்கு வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அல்பர்ட்டோ, ”நான் சார்டினியாவின் அரசர்” என்று சொன்னாராம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட குசெப்பின் மகன் பாவொலோ, ”நான் டவோலாராவின் அரசர்“ என்று கூறி இருக்கிறார். பாவோலோ, அரசர் அல்பர்ட்டோவுக்கு தீவு முழுவதையும் சுற்றி காண்பித்து, குறிப்பிட்ட வகை ஆடுகளை வேட்டையாடவும் உதவி செய்தார். தீவை முன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் அல்பர்ட்டோ, நாடு திரும்பியதும் டவோலாராவை தனி நாடாக அறிவித்து சாசனம் எழுதிக்கொடுத்தார். ஆதைத் தொடர்ந்துத் தன்னை புதிய நாட்டின் அரசராக பாவோலா அதிகரப்புர்வமாக அறிவித்துக்கொண்டார். அப்போது இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 33 தான்.

இத்தாலியின் நிறுவனர் என்று அழைக்கப்படும் கரிபால்டி உட்பட பல நாட்டு அதிபர்களுடன் டவோலாரா சமாதான உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. சார்டினியாவின் அரசரான இரண்டாம் விக்டோரியா இம்மனுவேலும் டவோலாராவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். பத்தொன்பதாம் நுற்றாண்டில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், டவோலாராவுக்குச் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்று முதல் இன்றுவரை லண்டன் பக்கிம்காம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் டவோலாரா அரசரின் படமும் ஒன்று.

அதே புகைப்படத்தின் நகல், டோனினோ பெர்டோலியோனியின் உணவு விடுதியை அலங்கரிக்கிறது. 1962ல், நேட்டோவின் ராணுவத்தளமாக மாறிய இந்த சிறிய நாட்டின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி இன்றும் டவோலாராவை ஒரு தனி நாடாகவே கருதுகிறது. ஆனால் உலகின் பிற நாடுகள் அந்த அங்கீகாரத்தை அதிகாரப்பபூர்வமாக இந்நாட்டுக்கு வழங்கவில்லை. டவோலாராவின் அரசர் டோனினோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து தீவுக்கு படகுச் சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் தனி சிறப்பான ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் மூலம் நல்ல வருமானம் வந்தாலும், எளிய வாழ்க்கையே டவோலாரா அரசரும் அவர் குடும்பத்தினரும் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hans-Otto Meissner (1963). Unknown Europe. trans. Florence and Isabel McHugh. London and Glasgow: Blackie & Sons. பக். 27. 
  2. "La République de Tavolara". A travers le monde aux pays inconnus. Paris: Librairie Hachette. 1896. பக். 176. https://books.google.com/books?id=3P0XAAAAYAAJ. 
  3. "Notice to Mariners," London Gazette, Aug 28, 1868, p 4734
"https://ta.wikipedia.org/w/index.php?title=டவோலாரா_நாடு&oldid=3312560" இலிருந்து மீள்விக்கப்பட்டது