டலாஸ் சூறாவளி (2011)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டலாஸ் சூறாவளி (2011)
Typhoon (JMA scale)
Tropical storm (JTWC scale)
Talas 2011-09-01.jpg
சூறாவளி மையம்
தொடக்கம்ஆகத்து 23, 2011
மறைவுஆகத்து 5, 2011
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph)
1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
தாழ் அமுக்கம்965 hPa (பார்); 28.5 inHg
இறப்புகள்43 பேர் கொல்லப்பட்டனர், 56 பேரை காணவில்லை
பாதிப்புப் பகுதிகள்சப்பான்
2011 பசுபிக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி

டலாஸ் (Talas) என்பது சப்பானின் மேற்குப் பகுதியை செப்டம்பர் 5 2011 இல் தாக்கிய சூறாவளியைக் குறிக்கும். இச் சூறாவளியின் வேகம் மணிக்கு 108 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை இருந்ததாகக் கூறப்பட்டது

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்[தொகு]

சப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நரா, வகயாமா மாகாணங்கள் மற்றும் சிக்கோக்கு தீவு ஆகியன அதிகளவில் பாதிப்புக்குட்டன.

இழப்புகள்[தொகு]

இச் சூறாவளி தாக்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 57 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டது. 106 பேர் காயமடைந்தனர். [1]சொத்துக்களின் இழப்பு மதிப்பீடு செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 460,000 பேர் இடம்பெயர்ந்தனர். தாழ்வான பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன

கடுமையான சூறாவளி[தொகு]

ஆண்டு தோறும் சப்பானை சூறாவளிகள் தாக்கி வருகின்றன. ஆனாலும் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டலாஸ் சூறாவளியே கடுமையானது எனக் கூறப்படுகிறது.

கடலை நோக்கி நகர்ந்தது[தொகு]

செப்டம்பர் 4, 2011 இல் டலாஸ் சூறாவளி சப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள கடலை நோக்கி நகர்ந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டலாஸ்_சூறாவளி_(2011)&oldid=1363713" இருந்து மீள்விக்கப்பட்டது