டர்போ சி++

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோபோ சி++ அல்லது டர்போ சி++
Turbo CPP Compiler.jpg

டர்போ சி++ இன் திரைக்காட்சி
உருவாக்குனர் போர்லாண்ட்
துவக்க வெளியீடு 28 பெப்ரவரி 1991
பிந்தைய பதிப்பு 2006 / 5 செப்டம்பர், 2006
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை ஒருங்கிணைந்த விருத்திச் சூழல்
அனுமதி இலவச மென்பொருள்e (Explorer)
Proprietary (Professional)
இணையத்தளம் டர்போ எக்ஸ்புளோளர்

டர்போ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இந்தத் தொடர் 1991 இல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஓர் அடிப்படை விருத்திச் சூழலாக டர்போ சி++ 2006 5 செப்டம்பர் 2006 மீள் அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் எக்ஸ்புளோளர் என்கின்ற இலவமாகப் பதிவிறக்கிப் பாவிக்கக்கூடிய பதிப்பினையின் வணிகரீதியிலான புரொபெஷனல் பதிப்பு என்று இருவேறான பதிப்புக்களாக வெளிவந்தது. புரொபெஷனல் பதிப்பு இப்பொழுது விற்பனையில் இல்லை.

வரலாற்றுப் பதிப்புக்கள்[தொகு]

இதன் முதலாவது மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளம் கணினி உலகை ஆட்டிப் படைத்த காலத்தில் வெளிவந்தது. முதலாவது பதிப்பு ஓஎஸ்/2 இயங்குதளத்திற்காக 1.0 எனவெளிவந்தது. 1.01 பதிப்பானது 28 பெப்ரவரி 1991 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தை ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது.[1] டாஸ் இயங்குதளத்தில் இயங்கும் டர்போ சி++ மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe மற்றும் *.com கோப்புக்களை உருவாக்கும். இது இண்டெல் x86 புரோசர்களுக்கான டர்போ அசம்பிளருடன் இணைத்து விநியோகிக்கப்பட்டது. இந்தக் கம்பைலர் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் C++ இல் இரண்டாவது பதிப்பினை ஆதரிக்கின்றது.

டர்போ சி++ 3.0 20 நவம்பர் 1991 இல் விண்டோஸ் பணிச்சூழலுக்கான வெளிவந்தது. இதில் டெம்லேட்டுக்களை ஆதரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் 8086 286 செயலிகளுக்கான ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

டர்போ சி++ 3.0 வெளிவந்ததும் மைக்ரோசாப்ட் பணிச்சூழலுக்கான சி++ உருவாக்குவதில் போர்லாண்ட் முயன்றது. விண்டோஸ் பணிச்சூழலுக்கான டர்போ சி++ 3.0 ஐத் தொடர்ந்து டர்போ சி++ 3.1 அதைத் தொடர்ந்து டர்போ சி++ 4.5 உம் வெளிவந்தது. இந்தப் பதிப்பின் 1 இல் இருந்து 3 இற்குப் பாய்ந்ததானது விண்டோஸ் பதிப்புக்களுடன் ஒப்பிடுவதாக அமைந்தாலும் 1989 இல் வெளிவந்த டர்போ சி 1990 இல் வெளிவந்த டர்போ சி++ இவை இரண்டும் ஒருங்கிணைந்த டர்போ சி++ 3 என்றவாறும் கருதலாம்.

3 ஆம் பதிப்பில் இருந்து போர்லாண்ட் இரண்டு பதிப்புக்களாக சி++ ஐ வெளிவிட்டது ஒன்று டர்போ சி++ மற்றையது போர்லாண்ட் சி++. டர்போ சி++ ஆரம்ப நிலை நிரலாக்கருக்கும் பொழுதுபோக்காக நிரலாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் என உருவாக்கப்பட்டது. போர்லாண்ட் சி++ நிரலாகத்தைத் தொழிலாகக் கொண்டு மென்பொருட்களை விருத்தி செய்பவர்களை இலக்கு வைத்து வெளிவந்தது. போர்லாண்ட் சி++ டர்போ சி++ இற்கு மேலதிகாமாக கம்பைலர் ஊடாக நிரலாக்கம் வினைத்திறனாகியது மற்றும் வர்தகரீதியான விருத்தியாளர்களை இலக்கு வைத்து ஆவணப்படுத்தும் வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது. டர்போ சி++ பதிப்பை டர்போ அசம்பிளர், டர்போ விஷன் 1.0 போன்ற் பொருத்துக்கள் மூலம் மேம்படுத்த இயலும்

இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் டர்போ பாஸ்கல், டர்போ பேசிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். டர்போ சி++ டர்போ சியின் வழிவந்ததாகும். டர்போ பாஸ்கலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. டர்போ சி++ பழைய மென்பொருள் அணுகப்பட்டது 21 ஜூன் 2008 (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டர்போ_சி%2B%2B&oldid=2229851" இருந்து மீள்விக்கப்பட்டது