டயாஸ்பாோ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டயாஸ்பாோ்

டயாஸ்பாோ் AIO(OH) வேதி உட்கூறினை உடைய கனிமமாகும். டயாஸ்பாோ் கனிமங்களில் சில பாக்சைட்டினைக் கொண்டவையாய் வெண்மையான தாள்படலத் திண்மையில் காணப்படும். இது செஞ்சாய்சதுரத் தொகுதியில் படிகமானது.

இயல்புகள்[தொகு]

இக்கனிமத்தின் படிகங்கள் அரிதாக, மென்தகடு அல்லது (010) இல் பலகை அமைப்பிலும், C க்கு இணையாக ஊசிவடிவப் படிகமாக நீண்டும், மெல்லிய செதில்களாகவும் கண்ணப்படுகிறது. (010) தலத்தில் தெளிவான பிளவுடன் (110) சீரற்ற பிலவினையும் சங்கு முறிவினையும் உடையதாகும். இதன் கடினத்தன்மை மோவின் அளவுத்திட்டத்தில் 6(1/2)- 7 ஆகும். எளிதில் நொறுங்கக்கூடிய இதன் ஒப்படர்த்தி 3.3 - 3.5, வெண்மை, சாம்பல் கலந்த வெண்மை, நிறமற்று,பச்சை கலந்த பழுப்பு நிறங்களிலும் காணப்படும்.பொலிவான பளிங்கு நிறத்தினையும் பிளவுற்ற தளங்களில் முது மீளிர்வினையும் உடையதாய்க் காணப்படும். ஒளிப்புகும் தன்மை முதல் ஓரளவிற்கு ஒளிக்கசியும் தன்மை வரையிலானது. ஈரச்சினை உடையதாகும். ஒளிவிலகல் எண் . α=1.682-1.706, β=1.705-1.725, γ=1.730-1.752. டயாஸ்பாோ், திண்ணிய மெல்லிய கோளவடிவப் பொருளாகப் போகிமைட் மற்றும் பாக்சைடில் மிகப் பரவலாகக் கிடைக்கிறது.[1]

மேற்காேள்கள்[தொகு]

  1. "டயாஸ்பாோ்". அறிவியல் களஞ்சியம் தொகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 7 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயாஸ்பாோ்&oldid=2657918" இருந்து மீள்விக்கப்பட்டது