டயாப்சைடு
Appearance
டயாப்சைடு (Diopside) என்பது கால்சியம் - மெக்னீசியம் பைராக்சீனை உடைய கனிமமாகும். இதில் சிலிக்கா 55.6%, சுண்ணாம்பு 25.9%, மக்னேசியா 18.5100% என்ற வேதி இயைபினை உடையது. இதன் நிறம் வெண்மை, மஞ்சள், சாம்பல் நிற வெண்மை முதல் இளம்பச்சை நிறங்களிலும் முடிவில் அடர்பச்சை மற்றும் கருப்பினை ஒத்த நிறங்களிலும் காணப்படுகிறது. இது ஒளிபுகும் தன்மையினதாய் நிறமற்று அரிதாக நீல நிறங்களில் காணப்படும். ஒப்படர்த்தி G =3.2-3.38. டயாப்சைடு பல வகைப்படும். அவை, குரோம் - டயாப்சைடு , ஆலாலைட் , ட்ராவெர்செலைட், வைலன், கானானைட், மான்ஸ்றோட் ஆகும்.[1][2]
மேற்காேள்கள்
[தொகு]- ↑ "Diopside, Chrome Diopside, Star Diopside and Violane". geology.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ GEOLOGYSCIENCE (2019-06-29). "Diopside". Geology Science (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.