டயமண்ட் சூத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன டயமண்ட் சூத்ரா நூல், உலகில் பழமையான அச்சிடப்பட்ட புத்தகம்.

டயமண்ட் சூத்திரா அல்லது வஜ்ர சூத்திரம் (Diamond Sūtra; சமசுகிருதம்:Vajracchedikā Prajñāpāramitā Sūtra) என்பது மகாயான (பௌத்தம்) சூத்திரம் ஆகும். இந்த டயமண்ட் சூத்ராவானது, கிழக்கு ஆசியாவில் மிக செல்வாக்கு உள்ள மகாயான சூத்திரங்களில் ஒன்றாகும். ஜென் புத்தசமயத்தில் உள்ள பக்தி மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய பொருளாக உள்ளது. இப்பொழுதும் அழியாமல் உள்ள ஆரம்பகால அச்சுப் புத்தகம் இது ஆகும்.

இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க நிதியுதவி செய்தவர் வாங் சியே. அவருடைய பெற்றோரின் நினைவாக இலவசமாக விநியோகிப்பதற்காக இந்த நூலை அவர் அச்சிட்டுள்ளார். சீனாவின் கான்சு மாகாணத்தின் டன்ஹுவாங் குகையில் டைமண்ட் சூத்ரா அச்சுப் புத்தகம் 1899-ல் கண்டெடுக்கப்பட்டது.

டயமண்ட் சூத்ராவின் சீன பதிப்பு ஒன்றின் நகலானது, ஆரேல் ஸ்டீன் என்பவரால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மஹாயனவிம்சிகா கையெழுத்துப் பிரதிகளில் கண்டெடுக்கப்பட்டது, இது கி.பி. 868 மே. 11 தேதியில் அச்சிடப்பட்டது..[1] இது கூட்டன்பர்க்கின் பைபிள் அச்சிடப்படுவதற்குக் கிட்டத்தட்ட 586 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. இந்த நூலின் ஒரு பிரதி பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. டைமண்ட் சூத்ரா நூலின் முகப்பில் அச்சிடப்பட்ட ஓவியம்தான், உலகிலேயே அச்சிடப்பட்ட முதல் ஓவியம் அட்டைப்படமும் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்த நூல் குறித்து பிரித்தானிய நூலகம், The earliest complete survival of a dated printed book. (உலகின் பழமையான முழுமைபெற்ற, தேதி இடப்பட்ட அச்சு நூல்) என்று குறிப்பிடுகிறது."[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Soeng, Mu (2000-06-15). Diamond Sutra: Transforming the Way We Perceive the World. Wisdom Publications. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86171-160-4. Archived from the original on 2014-01-03. https://web.archive.org/web/20140103092904/http://books.google.com/books?id=yhX_1dVKLtcC&pg=PA58. பார்த்த நாள்: 11 May 2012. 
  2. "முதல் அச்சுப் புத்தகம் கூட்டன்பர்க் பதிப்பித்ததா?". கட்டுரை. தி இந்து. 4 ஏப்ரல் 2017. 4 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Online Gallery – Sacred Texts: Diamond Sutra". Bl.uk British Library. 2003-11-30. 10 November 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயமண்ட்_சூத்திரா&oldid=3587091" இருந்து மீள்விக்கப்பட்டது