உள்ளடக்கத்துக்குச் செல்

டபிள்யூ. எஸ். கில்பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபிள்யூ. எஸ். கில்பர்ட்
டபிள்யூ. எஸ். கில்பர்ட்
டபிள்யூ. எஸ். கில்பர்ட்
பிறப்புசர் வில்லியம் இஷ்வெங்க் கில்பர்ட்
(1836-05-29)29 மே 1836
இங்கிலாந்து
இறப்பு5 திசம்பர் 1870(1870-12-05) (அகவை 68)
தொழில்நாடகக் கலைஞர், கவிஞர், இசைநாடக அமைப்பாளர் மற்றும் கோட்டோவியர்
தேசியம்ஆங்கிலம்
காலம்1829–1869
இலக்கிய இயக்கம்காதல் மற்றும் வரலாற்றுப் புதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்காமிக் ஓப்பரா, த பைரேட்ஸ் ஆஃப் பென்சான்ஸ்

சர் வில்லியம் இஷ்வெங்க் கில்பர்ட் (Sir William Schwenck Gilbert[1] 18 நவம்பர் 1836 – 29 மே 1911) ஓர் ஆங்கிலேய நாடகக் கலைஞர், கவிஞர், இசைநாடக அமைப்பாளர் மற்றும் கோட்டோவியர்.இவர் சர் ஆர்தர் சல்லிவனுடன் இணைந்து உருவாக்கிய 14 கோட்டோவியக்கதை ஓப்பராக்கள் [2] பரவலாக அறியப்பட்டவை. இவற்றில் எச்.எம்.எஸ். பினாஃபோர், த பைரேட்ஸ் ஆஃப் பென்சான்ஸ் த மிகாடோ ஆகியன மிகவும் புகழ் பெற்றவை. த மிகாடோ இசைநாடக வரலாற்றிலேயே மிகவும் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட நாடகமாக விளங்குகிறது.[3] இவையும் அவர்களது பிற ஓப்பராக்களும் ஆங்கிலம் பேசப்படும் உலகெங்கும் உள்ள ஓப்பரா நாடகக்குழுக்கள், பள்ளிகள் மற்றும் சமூக நாடகக் குழுக்களால் இன்றும் அரங்கேற்றப் படுகின்றன. இவற்றின் வரிகள் ஆங்கில மொழி இலக்கிய பாடங்களில் இடம் பெறுகின்றன.[4][5]

மேலும் கில்பர்ட் பாப் பாலர்ட்ஸ் எனப்பட்ட இலகு கவிதைகளை நகைச்சுவை ஓவியங்களுடன் எழுதினார். 75 நாடகங்களையும், ஓப்பரா வசனங்களையும், சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது நாடகங்களும் மெய்மையான மேடை இயக்கமும் ஆஸ்கார் வைல்ட் , ஜார்ஜ் பெர்னாட் ஷா உள்ளிட்ட பிற நாடகக் கலைசர்களுக்கு தூண்டுதலாக அமைந்தது.[6] "இவரது பாடல் வரிகளும் சந்த கையாளுமையும் காமிக் ஓப்பராக்களின் கவிதைத் தரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கும் பின்னும் இதுவரை எட்டாத நிலையிலும் உயர்த்தியுள்ளதாக" கேம்பிரிட்ஜ்ஜின் ஆங்கில அமெரிக்க இலக்கிய வரலாறு கூறுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. The name Gilbert is pronounced with a Hard and soft g.
  2. இவரும் சல்லிவனும் இவற்றை காமிக் ஓப்பரா என்ற சொல்லாக்கம் மூலம் அழைத்தனர்.
  3. Kenrick, John. G&S Story: Part III, accessed 13 October 2006; and Powell, Jim. William S. Gilbert's Wicked Wit for Liberty பரணிடப்பட்டது 2017-01-29 at the வந்தவழி இயந்திரம் accessed 13 October 2006.
  4. Lawrence, Arthur H. "An illustrated interview with Sir Arthur Sullivan" பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம் Part 3, from The Strand Magazine, Vol. xiv, No.84 (December 1897)
  5. Green, Edward, "Ballads, songs and speeches", BBC, 20 September 2004, accessed 16 October 2006. The latter phrase is a satiric take on சிசெரோ's De Legibus, 106 BC
  6. Feingold, Michael, "Engaging the Past" பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம், in The Village Voice May 4, 2004.
  7. The Cambridge History of English and American Literature, Volume XIII, Chapter VIII, Section 15 (1907–21)

வெளி இணைப்புகள்[தொகு]

கில்பர்ட்டின் ஆக்கங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._எஸ்._கில்பர்ட்&oldid=3687644" இலிருந்து மீள்விக்கப்பட்டது