உள்ளடக்கத்துக்குச் செல்

டக்கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1450 வாக்கில் டக்கோலா வரைந்த உந்துத் தண்டு விசையியக்கக் குழாய் குறித்த முதல் ஐரோப்பிய வரைபடம்.[1]
டக்கோலா வடிவமைத்த கூடுதல்நிலைப்படுத்தப்பட்ட சக்கரம் மற்றும் போர் இயந்திரங்கள்
டெ இஞ்சினிஸ் நூலில் டக்கோலா விளக்கிய பொறிகள்.
டெ மசினிஸ் (1449) என்ற நூலில் டக்கோலாவின் துடுப்புப் படகு அமைப்பு .
டக்கோலாவின் "விட்ருவியன் மனிதன்".

மாரியானோ டி ஜகோபோ டெட்டோ இல் டக்கோலா (Mariano di Jacopo detto il Taccola, 1382 – ஏறத்தாழ. 1453), சுருக்கமாக டக்கோலா ('காகம்'), இத்தாலியில் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்த ஓர் அரசு நிர்வாகி, கலைஞர் மற்றும் பொறியியலாளர். பல்வேறு புதுமையான பொறிகளையும் கருவிகளையும் விளக்கங்களுடன் வரைபடங்களாக தொகுத்த டெ இஞ்சினிஸ் , டெ மசினிஸ் என்ற அவரது தொழில்நுட்பக் கட்டுரைத்தொகுப்புகளுக்காக அறியப்படுகிறார். பிரான்செஸ்கோ டி ஜியார்ஜியோ, லியொனார்டோ டா வின்சி போன்ற பிற்கால மறுமலர்ச்சி பொறியாளர்களும் கலைஞர்களும் இவரது படைப்புக்களை பரவலாக படித்து வந்ததுடன் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுமுள்ளனர்.

வாழ்க்கையும் பணிவாழ்வும்

[தொகு]

மாரியானோ டக்கோலா இத்தாலியில் உள்ள சியான்னாவில் 1382இல் பிறந்தார். அவரது இளமைப் பருவம் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.[2] சியான்னாவில் ஆவண எழுத்துப் பதிவாளர், பல்கலைக்கழக செயலாளர், சிற்பி, சாலை மேற்பார்வையாளர், நீரியல் பொறியாளர் என பல்வேறு பணிகளைப் புரிந்துள்ளார்.[3] 1440களில் டக்கோலா தனது அலுவலகப் பணிகளிலிருந்து ஓய்வடைந்து அரசின் ஓய்வூதியம் பெற்று வந்தார். 1453ஆம் ஆண்டில் சான் ஜகோமோ சகோதர குழாமில் இணைந்ததாகவும் அதே ஆண்டில் மரணமடைந்ததாகவும் அறியப்படுகிறது.[4]

பணியும் பாணியும்

[தொகு]

டக்கோலா இரண்டு ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். முதலாவதான டெ இஞ்சினிஸ் (பொறிகளைக் குறித்தானது), 1419இல் நான்கு புத்தகங்களாக வெளியிட்டார்.[5] இந்தத் தொகுப்பை 1433,இலேயே முடித்து விட்டாலும் இதில் தொடர்ந்து திருத்தங்களை 1449 வரை செய்து வந்தார். அதே ஆண்டு இரண்டாவது கையெழுத்துப் பிரதியான டெ மசினிஸ் (இயந்திரங்களைக் குறித்தானது) வெளியானது.

இந்தத் தொகுப்புகள் தாளில் கருப்பு மையினால் வரையப்பட்டு தொடர்புடைய விளக்கங்களை கையால் எழுதப் பட்டிருந்தன. நீரியல் பொறியியல், தீட்டல்/துருவல் பொறிகள், கட்டுமான/போரியல் இயந்திரங்கள் குறித்த பல்வேறு 'புனைதிறம்வல்ல கருவிகள்' இடம் பெற்றிருந்தன. இவரது தலைப்புகள் பிந்தைய மறுமலர்ச்சி ஓவிய-பொறியாளர்களுக்கு உரியதாக இருப்பினும் இவரது வெளிப்பாட்டு முறை இடைக்காலத்துக்குரிய கையெழுத்து விளக்க முறையாகும்.[6] குறிப்பாக, இவரது வரைபடங்களில் இயலுறுத் தோற்றம் நிலைத்தில்லாமையால் அக்காலத்தில் நிகழ்ந்த இயலுறுத்தோற்ற ஓவியக்கலை புரட்சி குறித்து டக்கோலா அறிந்திருக்கவில்லை எனத் தோன்றுகிறது.[7] 'நேர்வழி வடுவுருவத்தின் தந்தை' என அறியப்படும் பிலிப்போ புருனெல்ஸ்கியுடன் நேர்காணல் நிகழ்த்திய ஒரே மனிதராகிய டக்கோலாவிற்கு இயலுறுத்தோற்றம் குறித்த அறிவில்லை என்பது வியப்பாக உள்ளது.[4] இத்தகைய குறைகள் இருப்பினும் டக்கோலாவின் பாணி அழுத்தமான, அதிகாரமிக்க, நம்பத்தகுந்த்தாக iவிவரிக்கப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A history of engineering in classical and medieval times Donald Routledge Hill, Routledge, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415152917 p.143 [1]
  2. Lawrence Fane, p.136
  3. Lon R. Shelby, p.466
  4. 4.0 4.1 Lawrence Fane, p.137
  5. Lon R. Shelby, p.467
  6. Lawrence Fane, p.138
  7. Lawrence Fane, p.139
  8. Lawrence Fane, p. 137ff.

நகல் பதிப்புகள்:

  • J.H. Beck, ed., Mariano di Jacopo detto il Taccola, Liber tertius de ingeneis ac edifitiis non usitatis, (Milan: Edizioni il Polifilo, 1969), 156 pp., 96 pls.
    (This edition reproduces Books III and IV of de Ingeneis)
  • Frank D. Prager and Gustina Scaglia, eds., Mariano Taccola and His Book "De ingeneis" (Cambridge, Mass.: M.I.T. Press, 1971), 230 pp., 129 pls.
    (This edition also reproduces Books III and IV of de Ingeneis)
  • Gustina Scaglia, ed., Mariano Taccola, De machinis: The Engineering Treatise of 1449, 2 vols. (Wiesbaden: Dr. Ludwig Reichert Verlag, 1971), 181 and 210 pp., 200 pls.

இரண்டாம்நிலை வளங்கள்:

  • Lawrence Fane, "The Invented World of Mariano Taccola", Leonardo (2003), Vol. 36, No. 2, pp. 135–143
    (Taccola’s drawings from the perspective of an artist)
  • Lon R. Shelby, "Mariano Taccola and His Books on Engines and Machines", Technology and Culture, Vol. 16, No. 3. (Jul., 1975), pp. 466–475
    (Review of Taccola’s treatises and its three modern editions (see above))

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்கோலா&oldid=2697126" இலிருந்து மீள்விக்கப்பட்டது