ஞாறாம்விளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞாறாம்விளை கிராமம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[1] ஞாறாம்விளை அண்டை கிராமங்களில் சில திக்குறிச்சி, பேரை, ஆலுவிளை, கடந்தான்கொடு, தேனாம்பாறை முதலியவை ஆகும். ஞாறாம்விளை பாகோடு பேரூராட்சியின் பகுதியாகும்.

ஞாறாம்விளை குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. மார்த்தாண்டம்த்தையும் ஞாறாம்விளை இணைக்கும் நேசமணி பாலம் அமைந்துள்ளது

ஞாறாம்விளை சந்திப்பில் பல விதமான வேலைவாய்புகளை கொடுக்க கூடிய மிக முக்கியமான இடம். 1990 முதல் 2005 கால கட்டங்களில் தினமும் 1000 பேருக்கு மேல் வைலை கிடைத்தது. இது செங்கல் சூளை, மணல் கடவுகள், லாரியில் செங்கல் ஏற்றும் இறக்கும் தொழில், மணல் ஏற்றும் இறக்கும் தொழில் ஆகியவை முக்கியமானது. இந்த வேலைகளை செய்வதற்க்காக பல்வேறு இடங்களில் இருந்து ஞாறாம்விளைக்கு அதிகாலை 4 மணிக்கே வந்து விடுவார்கள்.

சமய வழிபாட்டு தலங்கள்[தொகு]

கிறிஸ்தவ ஆலயங்கள்[தொகு]

இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு கிருபாசன், ஞாறாம்விளை சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை

இந்து சமய கோவில்கள்[தொகு]

சிதறால் மலைக் கோவில், கிருஷ்ணன் கோவில், பேரை


சான்றுகள்[தொகு]

  1. "ஞாறாம் விளை". Archived from the original on 2019-08-29.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாறாம்விளை&oldid=3556383" இலிருந்து மீள்விக்கப்பட்டது