ஞாயிறு பள்ளி சமுதாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் பாக்சு, ஞாயிறு பள்ளி சமுதாயம் அமைப்பின் நிறுவனர்

ஞாயிறு பள்ளி சமுதாயம் (Sunday School Society) என்பது ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளின் பிரித்தானிய சங்கம் ஆகும். இச்சங்கம் 1785 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் வில்லியம் பாக்ஸ் (1736-1826) என்பவரால் நிறுவப்பட்டது.[1]

இந்த அமைப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி செல்லாத ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு கல்வியைக் கொடுத்தது. இந்த சங்கம் ஏறக்குறைய 4000 பள்ளிகளை ஏற்படுத்தியது. தன் அமைப்பிற்கென விதிகளை வகுத்துக் கொண்டது. பாடப்புத்தகங்களை வழங்கியது. நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொண்டது. இந்த அமைப்பின் மூலமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் கல்வியறிவற்றவர்கள் அடிப்படைக் கல்வியறிவைப் பெற முடிந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. William Fox, Robert Raikes (1831). Memoir of W. Fox, Esq., founder of the Sunday-School Society: comprising the history of the origin ... of that ... institution, with correspondence ... between W. Fox, Esq. and R. Raikes, etc.. Joseph Ivimey (editor). George Wightman. 
  2. "Fox Organized Sunday School Society". Christianity.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிறு_பள்ளி_சமுதாயம்&oldid=3925132" இலிருந்து மீள்விக்கப்பட்டது