ஞானப்பள்ளு
Appearance
திருவாரூர்த் தியாகேசர் ஞானப் பள்ளேசல் என்னும் நூல் ஒன்றைச் சோழமண்டல சதகம் குறிப்பிடுகிறது. [1]
இதற்கு ஞானப்பள்ளு என்னும் பெயர் உண்டு என்றும், கமலை ஞானப்பிரகாசர் இதனைச் செய்தார் என்றும் கூறுகின்றனர்.
இது பொருந்தாது என அறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார்.
- பள்ளு நூல் உழவர்களைப் பாடும். இந்த நூலில் துதிப்பாடல்கள் உள்ளன. எனவே இது பள்ளுநூல் அன்று என்பர்.
- பள்ளுநூலில் இறைவனைச் சாடிப் போற்றும் பாடல்கள் உள்ளன. எனவே ஞானப்பள்ளு நூலும் சிவபெருமானை வஞ்சப்புகழ்ச்சி செய்யும் நூல் எனக் கொள்ளலாம்.
- பாடல் பகுதி
கமலையும் என்மனமும் காதலித்து வாழும் அமலர் திருமுன்போய் அன்னங்காள் – நமரமதன் துன்னுமிருந் தேன்பகழி தூற்றுமெனும் ஆருயிர்கொண்(டு) இன்று இருந்தேன் எனும்.
இந்தப் பள்ளு நூலில் உள்ள இந்தப் பாடல் அன்னத்தைத் தூது விடும் பாடலாக உள்ளது.
மேலும் இந்த நூலின் இறுதியிலுள்ள விருத்தப்பாடல் ஒன்று
நற்கவிதை கொண்டு பள்ளின் வர்க்கம் உரைத்த ஞானப் பிரகாசர் வாழி
என முடிகிறது, எனவே இந்த நூலைப் பாடியவர் கமலை ஞானப்பிரகாசர் அன்று என்பது தெளிவாகிறது.
- நூலின் காலம் 17-ஆம் நூற்றாண்டு
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சோழமண்டல சதகம் பாடல் 88