ஜோஸ் தெட்டாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஸ் தெட்டாயில்
போக்குவரத்துத் துறை அமைச்சகம்
பதவியில்
2009–2011
முன்னவர் மேத்யூ டி. தாமஸ்
பின்வந்தவர் வி. எஸ். சிவக்குமார்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2016
முன்னவர் பி. ஜே. ஜோய்
பின்வந்தவர் ரோஜி எம். ஜான்
தொகுதி அங்கமாலி
தனிநபர் தகவல்
பிறப்பு 17 ஆகத்து 1950 (1950-08-17) (அகவை 73)
அங்கமாலி, எர்ணாகுளம், திருவாங்கூர்-கொச்சி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) டெய்சி
பிள்ளைகள் ஆதர்ஷ், ஜோஸ்
இணையம் josethettayil.in

ஜோஸ் தெட்டாயில் (Jose Thettayil) (பிறப்பு 17 ஆகஸ்ட் 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும், வழக்கறிஞரும், ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) உறுப்பினருமாவார். இவர் கேரள அரசாங்கத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார்.[1] இவர் கேரள சட்டமன்றத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]

தொழில்[தொகு]

ஜோஸ் அங்கமாலியில் 17 ஆகஸ்ட் 1950 அன்று தாமஸ் தெட்டாயில் - பிலோமினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் காலடியில் சிறீ சங்கரா கல்லூரியில் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்பட்டமும் பெற்றார். இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான கேரள மாணவர் ஒன்றியம் மூலம் அரசியலில் நுழைந்த இவர் 1973இல் அங்கமாலி தொகுதியில் இளைஞர் காங்கிரசின் அமைப்பாளராக இருந்தார். 1975இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார் , நெருக்கடி நிலை காலத்தில் 1977இல் முன்னாள் ஜனதா கட்சியில் சேர்ந்து 1980இல் மாநிலக் குழு உறுப்பினராகவும், தேசிய அமைப்பு உறுப்பினராகவும், 1981இல் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் ஆனார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஜோஸ், டெய்சி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜோஸ், ஆதர்ஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

குற்றச்சாட்டு[தொகு]

ஜூன் 2013 இல், இவரும், இவரது மகன் ஆதர்ஷும் சேர்ந்து ஒரு வருடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவரது தொகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டனர்.[4] அப்பெண் இவருடன் இடம்பெற்ற படுக்கையறை காட்சிகளின் திருத்தப்பட்ட பதிப்புகளை வெளியிட்டார்.[5] இது ஒரு கற்பழிப்பு அல்ல, ஒரு சந்திப்பு என பின்னர் நிரூபிக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் மனுவை "அரசியல் உள்நோக்கம்" கொண்டதாகக் கருதி இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி டி. எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, அந்த பெண் தெட்டாயிலை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், நெருக்கமான தருணங்களை படம் பிடித்ததாகவும் குறிப்பிட்டார்.[6] [7][8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_தெட்டாயில்&oldid=3632235" இருந்து மீள்விக்கப்பட்டது