ஜோஷ்னா பெர்னாண்டோ
ஜோஷ்னா பெர்னாண்டோ | |
|---|---|
| பிறப்பு | 12 நவம்பர் 1991 இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
| பணி | நடிகை, வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 1999; 2012–தற்போது |
ஜோஷ்னா பெர்னாண்டோ (Joshna Fernando, பிறப்பு: நவம்பர் 12, 1991) என்பவர் ஒரு இந்திய நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.[1][2][3]
துவக்க கால வாழ்க்கை
[தொகு]தமிழ் திரைப்படத் துறையுடன் தொடர்பு கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜோஷ்னா, சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார். குழந்தை நட்சத்திரமாகவும் நடுத்துள்ளார். இவரது தாயார் சரோஜா, கே. பாலசந்தரின் மரோசரித்ரா (1978), வாலியின் வடமலை (1982) ஆகிய படங்களில் நடித்த முன்னாள் நடிகை ஆவார். இவரது தந்தை ஸ்டான்லி பெர்னாண்டோ, எம். ஆர். ராதாவின் மனைவியின் சகோதரர் ஆவார். ஜோஷ்னா நடிகை/தயாரிப்பாளர்கள் ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோருக்கு உறவினர் ஆவார்.[4] ஜோஷ்னா தமிழ் நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரும், இதைப்படத் தயாரிப்பாளரான சுஜாதா விஜய்குமாரின் மருமகளும் ஆவார்.
தொழில்
[தொகு]ஜோஷ்னா தனது நான்கு வயதில், ராதிகா சரத்குமாரின் தொலைக்காட்சித் திரைப்படமான சிறகுகள் (1999) படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மகளாக நடித்து அதன் மூலம் நடிப்பில் அறிமுகமானார்.[5] 2008 ஆம் ஆண்டில், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வந்தார். மறுபடியும் ஒரு காதல் (2012) படத்தில் லண்டனில் பிறந்த மருத்துவ மாணவி மகேஸ்வரி என்ற வேடத்தில் நடித்தார். அப்படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் லண்டனைச் சேர்ந்த ஒரு நடிகையை நடிக்க வைக்க விரும்பியதால் ஜோஷ்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் லண்டனிலும், சென்னையிலும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.[6] இந்தப் படம் தாமதமாக 2012 ஆம் ஆண்டு வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு விமர்சகர் இந்த முன்னணி ஜோடி "ஒரு நல்ல கதையில் பிரகாசிக்கும் திறன் கொண்டவர்கள் போல் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.[7][8] பின்னர் இவர் 2012 இல் கை என்ற அதிரடித் திரைப்படத்திலும் பணியாற்றினார்.[9] அதே ஆண்டில், ஜோஷ்னா இளையராஜாவுடன் இணைந்து நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார், நாடித் துடிக்குதடி திரைப்படத்தில் முதன் முதலில் தோன்றினார்.[10] இந்த திரைப்படம் ஃபிஜி அரசாங்கத்தின் நிதியுதவியுடன், அந்த நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிஜியில் படமாக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திரைப்பணி நிறைவடைந்த பிறகும் கிடப்பில் போடப்பட்டது. நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவுடன் இணைந்து ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் படத்தில் பணிபுரிந்து வந்தார். இயக்குனரின் திடீர் மரணம் காரணமாக படம் கைவிடப்பட்டது.[11]
2013 ஆம் ஆண்டில், வீட் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில், ஒரே பிரித்தானிய தேசியப் பெண்ணாக இறுதிப் போட்டியாளராகப் போட்டியிட்டார்.[12] நடிகை லட்சுமி ராய் படத்திட்டத்தில் வெளியேறிய நிலையில், 2013 நவம்பரில், ஜோஷ்னா இரும்புக் குதிரை (2014) என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிக்க அழைத்து வரப்பட்டார். பின்னர் ஜோஷ்னா இத்தாலியில் நடந்த படப்பிடிப்பில் சில காட்சிகள் மற்றும் நடிகர்களுடன் ஒரு பாடலுக்காகன படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.[13] இருப்பினும், 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஒரு திருப்பத்தில், லட்சுமி ராய் மீண்டும் அந்தப் படத்தில் பணியாற்ற இணைந்தார். இதனால் ஜோஷ்னாவின் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. ஜோஷ்னா இடம்பெறும் ஒரு காட்சி மட்டும் படத்தில் பயன்படுத்தப்பட்டது. அக்காட்சி இவர் லட்சுமி ராயின் சகோதரியாகத் தோன்றும் வகையில் திருத்தப்பட்டது. இவர் ஒரு கிடங்கில் அதர்வா, பிரியா ஆனந்தின் கதாபாத்திரங்களுக்கு பல்வேறு சூப்பர் பைக்குகளைக் காட்டுகிறார்.[14]
இவர் தற்போது வயது வந்தோருக்கான வடிவழகி துறையில் ஈடுபட்டு வருகிறார், சமீபத்தில் பிளேபாயில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்ட முதல் தமிழ் நடிகை என்ற பெருமையைப் பெற்றார்.
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1999 | சிறகுகள் | ஷில்பா | |
| 2012 | மறுபடியும் ஒரு காதல் | மகேஸ்வரி | |
| காய் | பிரியா | ||
| 2014 | இரும்புக் குதிரை | கிறிஸ்டினாவின் சகோதரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chat with Saroja's daughter Joshna - Tamil Cinema News, Movies, TV Serial, TV Shows". Archived from the original on 4 March 2016. Retrieved 22 November 2015.
- ↑ "High-spirited Josna makes her debut". 7 November 2008. Archived from the original on 17 March 2016.
- ↑ "Ayngaran International". Archived from the original on 22 November 2015.
- ↑ "|| Obituaries".
- ↑ "Joshna Interview - Tamil Event Video - Josna | Interview | Marupadiyum Oru Kadhal | Anirudh".
- ↑ "Shot Cuts: "Vishwaroopam" gathers pace". http://www.thehindu.com/features/cinema/shot-cuts-vishwaroopam-gathers-pace/article3397283.ece.
- ↑ "Marupadiyum Oru Kadhal Movie Review {1.5/5}: Critic Review of Marupadiyum Oru Kadhal by Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Marupadiyum Oru Kadhal Review - Marupadiyum Oru Kadhal Movie Review".
- ↑ "Kai Review - Kai Movie Review".
- ↑ "Naadi Thudikuthad". ஐ. எம். டி. பி இணையத்தளம்.
- ↑ "Ayngaran International". Archived from the original on 26 January 2010. Retrieved 1 December 2015.
- ↑ Sri Lanka, Elakiri (13 June 2013). "Derana Veet Miss Sri Lanka 2013".
- ↑ "Joshna is the latest addition to Irumbu Kuthirai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Confusion sorted: Lakshmi Rai is back in Irumbu Kuthirai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.