ஜோல்னா பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு வகை ஜோல்னா பை

ஜோல்னா பை அல்லது தோள் பை (Tote bag) என்பது துணியால் தைக்கப்பட்ட ஒரு வகை பை ஆகும்.

ஜோல்னா பையானது 1970 களில், பிரபலமாக இருந்த பை ஆகும். அப்போது பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பள்ளிச் சிறுவர்கள் என பலரும் பயன்படுத்தி வந்தனர்.[1]

பெயராய்வு[தொகு]

ஜோல்னா பை என்பது தோள்நால்ப் பை என்பதின் திரிபு ஆகும். இது தோள்+நால்+பை என்ற சொல்களின் சேர்க்கையாகும். தோள் என்பது தோள்பட்டையையும், நாலுதல் என்பது தொங்குதல் என்பதையையும் பொருளாக கொண்டது.[2]

வடிவமைப்பு[தொகு]

இது மிக எளிமையானதாகவும், குறைந்த விலை கொண்டதுமாகவும், நீண்ட காலம் உழைக்கக்கூடியதும் ஆகும். ஒரு எளிய பையின் இரு முனைகளை இணைக்கும் வகையில் நீண்ட பட்டை அமைக்கப்பட்டிருக்கும்வகையில் இது இருக்கும்.

தற்காலத்தில்[தொகு]

முன்பு மங்கிய நிறங்களில்தான் ஜோல்னா பைகள் பெரும்பாலும் இருந்தன. தற்காலத்தில் வண்ண வண்ண நிறங்களில், வாசகங்கள் பொறிப்பது, எம்பிராய்டரி உள்ளிட்ட வேலைப்பாடு செய்யப்பட்டு, நேர்த்தியாக கிடைக்கின்றன.[3]

மேலும் இது அறிவு ஜீவிகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தப் பையை பயன்படுத்தும் பிரபல நபர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. ச. சிவசங்கர் (மார்ச் 30 2018). "ஜோல்னாவுக்கு வந்தனம்". தி இந்து தமிழ். 
  2. "Log into Facebook". Facebook (in ஆங்கிலம்). 2022-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ஜோல்னா பையின் புது வடிவம்!". கட்டுரை. seithupaarungal.com. 2013 ஏப்ரல் 3. 3 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோல்னா_பை&oldid=3449836" இருந்து மீள்விக்கப்பட்டது