ஜோர்தானின் முதலாம் அப்துல்லா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அப்துல்லா பின் உசேன் Abdullah bin Hussein | |
---|---|
ஜோர்தானிய மன்னர் | |
ஆட்சி | 1949 - 1951 |
தலால் பின் அப்துல்லா | |
வாரிசு(கள்) | இளவரசி ஹயா மன்னர் தலால் இளவரசர் நாயெஃப் இளவரசி முனீரா இளவரசி மாக்புலா |
மரபு | ஹாசெமைட் |
தந்தை | உசேன் பின் அலி |
தாய் | அப்தியா பின் அப்துல்லா |
சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (Sir Abdullah I bin al-Hussein; (1882 - ஜூலை 20, 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25, 1946 முதல் 1949 வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார்.
படுகொலை
[தொகு]ஜூலை 20, 1951 இல் அப்துல்லா, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது 21 அகவையுடைய "முஸ்தபா ஊஷோ" என்ற பாலஸ்தீன இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வுக்கு முன்னர் ஜூலை 16 இல் லெபனானின் முன்னாள் பிரதமார் "ரியாட் அஸ்-சோல் அம்மான் நகரில் படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படவிருக்கிறது என்ற வதந்தி பரவியிருந்தது.
அப்துல்லா கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் தலால் மன்னராக முடி சூடினார். தலால் சுகவீனமாக இருந்ததன் காரணமாக அவரது மகன் இளவரசர் உசேன் (மன்னர் உசேன்) தனது 17வது வயதில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Details of Abdullah's assassination பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம்