ஜோர்ஜ் ஈஸ்ற்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் ஈஸ்ற்மன்
George Eastman Edit on Wikidata
பிறப்பு12 சூலை 1854
Waterville
இறப்பு14 மார்ச்சு 1932 (அகவை 77)
இரோசெச்டர்
கல்லறைEastman Business Park
பணிதொழில் முனைவோர், புத்தாக்குனர், ஒளிப்படக் கலைஞர், patron of the arts
விருதுகள்National Inventors Hall of Fame, Progress Medal, American Institute of Chemists Gold Medal, star on Hollywood Walk of Fame
கையெழுத்து
ஜோர்ஜ் ஈஸ்ட்மன்

ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) (George Eastman, ஜூலை 12, 1854 - மார்ச் 14, 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) அவர்கள் 1854 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.

வள்ளன்மை[தொகு]

தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை தாராளமாக வழங்கினார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக்கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழகத்திற்கும் அளித்தார்.[1]

இறப்பு[தொகு]

ஈஸ்ட்மென் 1932 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" (My work is done. Why wait?) என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கே, ராஜு (நவம்பர் 18, 2013), "வரலாற்றில் சில விஞ்ஞானிகள்-3", தீக்கதிர், archived from the original on நவம்பர் 18, 2013, பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2013{{citation}}: CS1 maint: date and year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_ஈஸ்ற்மன்&oldid=2733442" இலிருந்து மீள்விக்கப்பட்டது