உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோபா முர்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோபா முர்மு
பிறப்புஜம்சேத்பூர், சார்க்கண்டு, இந்தியா
தொழில்இலக்கிய எழுத்தாளர்
மொழிசந்தாளி மொழி
தேசியம்இந்தியர்
வகைகுழந்தை இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி, பால சாகித்திய அகாதமி விருது

ஜோபா முர்மு (Joba Murmu) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். இவர் சந்தாளி இலக்கியப் படைப்புகளுக்காப் பெயர் பெற்றவர். சந்தாளி இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பிற்காக நவம்பர் 14, 2017 அன்று சாகித்திய அகாத்மியின் குழந்தை இலக்கிய விருதைப் பெற்றார்.[1]

இளமை

[தொகு]

முர்மு சார்கண்டின் ஜம்சேத்பூரில் சிரீ சிஆர் மாஜி மற்றும் பகா முர்மு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

இவர் சிறுவயதில் நாவல்களையும் கதைகளையும் எப்போதும் ஆர்வத்துடன் படிப்பார்.

கல்லூரி இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, சந்தாளி மொழியிலும் இந்தி மொழியிலும் முதுகலைப் பட்டம் பெற்றார் முர்மு. கல்லூரியில் படிக்கும் போது நாடகங்களில் முர்முவிற்கு ஆர்வம் அதிகரித்தது. நாடகம் ஒன்றின் போது தனது வருங்காலக் கணவர் பீதாம்பர் மாஜியினைச் சந்தித்தார் முர்மு. மாஜி 2012ல் சாகித்திய அகாதமியின் பால சாகித்திய அகாதமி விருதினை வென்றவர் ஆவார்.

எழுத்தாளராக

[தொகு]

ஜோபா முர்மு ஒரு சந்தாளி எழுத்தாளராக சந்தாளி சமூகத்தில் அறியப்பட்டவர்.

2017இல் புது தில்லியின் சாகித்திய அகாதமியால் பால சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.


பகா உமுல், கவிதைத் தொகுப்பு, பெவ்ரா, சிறுகதைத் தொகுப்பு, பிரேம் சந்தா சோர்சு ககானி கோ, உள்ளிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார் முர்மு. இவர் எழுதிய ஓலோன் பாகாவிற்காக 2017-இல் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். [2]

இரவீந்திர நாத் தாகூரின் புகழ்பெற்ற கீதாஞ்சலி புத்தகத்தையும் சந்தாளியில் மொழிபெயர்த்தார். முர்முவுக்கு 2016ஆம் ஆண்டு அகில இந்திய சந்தாளி எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆர். ஆர். கிசுகு ரபஜ் விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2012-இல் பண்டிதர் இரகுநாத் முர்மு விருதும் 2020-இல் இரவீந்திரநாத் தாகூர் விருதும் வழங்கப்பட்டது.[3]

முர்மு தற்போது ஜம்சேத்பூரில் உள்ள கரண்டியில் பால் விகாசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[4] சந்தாளி திரைப்படத்தில் பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவும் இயக்குநராகவும் இருந்துள்ளார். ஜம்சேத்பூரில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.[5]

வெளியீடு

[தொகு]

முர்மு 21 சிறுகதைகள் கொண்ட ஒரு புத்தகத்தை 'ஓலோன் பகா' என்ற பெயரில் எழுதினார். இதற்கு 2017-இல் சாகித்திய அகாதமியால் பால சாகித்திய விருது வழங்கப்பட்டது [6]

பிரேம்சந்தின் கதைகளையும், இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியையும் சந்தாளியில் மொழிபெயர்த்துள்ளார்.[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Joba Murmu,Santali writer,selected for Bal Sahitya Award – Jharkhand State News".
  2. "जोबा मुर्मू को संथाली का साहित्य अकादमी पुरस्कार". Hindustan (in இந்தி). Retrieved 2024-01-15.
  3. "Her Akademi moment". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-01-15.
  4. "Steel City tribal school teacher gets Sahitya Akademi award". https://timesofindia.indiatimes.com/city/jamshedpur/steel-city-tribal-school-teacher-gets-sahitya-akademi-award/articleshow/59296951.cms. 
  5. "Joba Murmu,Santali writer,selected for Bal Sahitya Award - Jharkhand State News". jharkhandstatenews.com. 2017-06-23. Retrieved 2024-01-15.
  6. "Joba Murmu – Hyderabad Literary Festival" (in ஆங்கிலம்). Retrieved 2024-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோபா_முர்மு&oldid=4202081" இலிருந்து மீள்விக்கப்பட்டது