உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் பயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் பயஸ்
2016 இல் ஜோன் பயஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜோன் சாண்டோஸ் பேஸ்
பிறப்புசனவரி 9, 1941 (1941-01-09) (அகவை 84)
ஸ்டேட்டன் தீவு, நியூயார்க், அமெரிக்கா.
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • இசைக்கலைஞர்
  • செயற்பாட்டாளர்
இசைக்கருவி(கள்)
  • குரலிசை
  • கிட்டார்
இசைத்துறையில்1958–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வான்கார்ட்
  • ஆர்.சி.ஏ விக்டர்
  • ஏ&எம் ரெக்கார்ட்ஸ்
  • கொலம்பியா ரெக்கார்ட்ஸ்
  • கோல்ட் கேஸில் ரெக்கார்ட்ஸ்
  • வர்ஜின் ரெக்கார்ட்ஸ்
  • கார்டியன்
  • ஈ1 என்டர்டெயின்மென்ட்
  • ரேஸர் & டை
இணையதளம்www.joanbaez.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

ஜோன் சாண்டோஸ் பயஸ் (Joan Chandos Baez, /bz/, [a]Spanish: [ˈbaes] ; பிறப்பு: 9 சனவரி 9, 1941 ) என்பவர் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், சமூக செயற்பாட்டாளர் ஆவார்.[3] இவரது சமகால நாட்டுப்புற இசையில் பெரும்பாலும் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் சமூக நீதிக்கான பாடல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பயஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் பாடி, 30க்கும் மேற்பட்ட பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

பயஸ் பொதுவாக ஒரு நாட்டுப்புற பாடகியாகக் கருதப்படுகிறார். ஆனால் இவரது இசை 1960களின் எதிர் பண்பாட்டுக் காலத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட்டதாக உள்ளது. இவரது இசையானது நாட்டுப்புற ராக், பாப், நற்செய்தி இசை போன்ற வகைகளைக் கொண்டது. இவர் 1960 இல் தனது முதல் இசைப்பதிவுத் தொகுப்பை வெளியிட்டு எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். இவரது முதல் மூன்று பாடல் தொகுதிகளான ஜோன் பேஸ், ஜோன் பேஸ், தொகுதி. 2, கான்செர்ட்டில் ஜோன் பேஸ், அனைத்தும் கோல்டு ரெக்கார்ட் சாதனையைப் புரிந்தன. [4] பயஸ் ஒரு பாடலாசிரியராக இருந்தாலும், பொதுவாக மற்றவர்களின் படைப்புகளையும் பிரபலப்படுத்துகிறார். [5] ஆல்மேன் பிரதர்ஸ் பேண்ட், பீட்டில்ஸ், ஜாக்சன் பிரவுன், லியோனார்ட் கோஹன், வூடி குத்ரி, வயலெட்டா பர்ரா, த ரோலிங் ஸ்டோன்ஸ், பீட் சீகர், பால் சைமன், ஸ்டீவி வொண்டர், பாப் மார்லி போன்ற பலர் எழுதிய பல பாரம்பரிய பாடல் தொகுதிகளை உருவாக்கியுள்ளார். 1960 களின் முற்பகுதியில் பாப் டிலானின் பாடல்களை இசைத் தொகுதியாக பதிவுசெய்த முதல் முக்கிய கலைஞர்களில் இவரும் ஒருவர்; பயஸ் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞராக இருந்தார் என்றாலும், பாப் டிலானின் ஆரம்பகாலத்தில் எழுதிய பாடல்களை பிரபலப்படுத்த நிறைய செய்தார்.[6] [7] டிலானுடனான இவரது கொந்தளிப்பான உறவு பின்னர் இருவரின் பாடல்களுக்கும் கருப்பொருளாக மாறியது. அவை பொது ஊகங்களை மிகுதியாக உருவாக்கின.[8] இவரது பிந்தைய பாடல் தொகுதிகளில், ரியான் ஆடம்ஸ், ஜோஷ் ரிட்டர், ஸ்டீவ் ஏர்ல், நடாலி மெர்ச்சன்ட், ஜோ ஹென்றி உள்ளிட்ட அண்மைய பாடலாசிரியர்களின் படைப்புகளை பரபலமாக்குவதில் இவர் வெற்றியைக் கண்டார்.

1969 ஆம் ஆண்டு வுட்ஸ்டாக் விழாவில் பதினான்கு பாடல்களைப் பாடிய பயஸ், அகிம்சை, குடிசார் உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கான அரசியல், சமூக செயல்பாடுகளில் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுள்ளார். அமெரிக்காவின் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்தில் 2017 ஏப்ரல் 7 அன்று பயஸ் ஆவணப்படுத்தப்பட்டார்.[9]

2010 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில், "We Shall Overcome" பாடலை பயஸ் பாடுகிறார்.

வாழ்கை வரலாறு

[தொகு]

ஸ்காட்லாந்து 1941 சனவரி 9 அன்று நியூயார்க் நகரத்தின் ஸ்டேட்டன் தீவுப் பகுதியில் பிறந்தார்.[10] ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் பிறந்த ஜோன் சாண்டோஸ் என்ற, தாய்க்கும் மெக்சிகோவைப் பிறப்பிடமாக கொண்ட ஆல்பர்ட் பேஸ் என்ற தந்தைக்கும் ஜோன் பயஸ் பிறந்தார். மூன்று சகோதரிகளில் இரண்டாவதாக பேஸ் பிறந்தார். சகோதரிகள் அவர்கள் அனைவரும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆவர். வளர்ந்து வரும் போது, ​பயஸ் தனது மெக்சிகன் பாரம்பரிய அடையாளத்தின் காரணமாக இனப் பாகுபாட்டுக்கு ஆளானார்.

யுனெஸ்கோவில் தன் தந்தையின் பணியின் காரணமாக, இவர்களது குடும்பம் இடம்பெயர்ந்தபடி இருந்தது. அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களிலும், இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், கனடா, ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் வசித்து வந்தது. அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்தார். ஜோன் பயஸ் தனது தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில் குடிசார் உரிமைகள் மற்றும் அகிம்சை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். தன் 13 வயதில் அமெரிக்க நட்டுப்புறப் பாடகர் பீட் சீகரின் இசையைக் கேட்டு இசைத்துறையில் ஆர்வம் கொண்டார். விரைவில் பாடகராக உருவெடுத்தார்.

அது அமெரிக்காவன் ஒரு கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது. ஆப்பிரிக அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காக தீவிரமாக போராடி வந்தனர். கல்லூரி காலத்திலேயே அவர்களின் போராட்டங்களுக்கு பயஸ் ஆதரவு அளித்து வந்தார்.

1960 ஆம் ஆண்டு தன் 19 வயதில் தன் முதல் இசைக் கோப்பை வெளியிட்டார். அது எதிர்ப்பார்த்ததைவிட மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து இவர் வெளியிட்ட மூன்று பாடல் தொகுதிகளும் கோல்டு ரெக்கார்ட் சாதனையைப் புரிந்தன. இப்போது இசையுடன் சமூகப் போராட்டங்கிலும் கவனம் செலுத்தினார். ஆப்பிரிக அமெரிக்கர்களின் போராட்டங்களிலும் பேரணிகளிலும் நாங்கள் வெல்லுவோம்.. நாங்கள் வெல்லுவோம்... நாங்கள் வெல்லுவோம் ஒர் நாள் (We Shall Overcome) என்ற பாடலை பாடி உணர்சியூட்டினார். மார்ட்டின் லூதர் கிங்குடன் நட்பு பாராட்டினார்.

இனப் பாகுபாடு, மனித உரிமை, வன்முறை எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, சூழலியல் ஆதரவு, மரண தண்டணை ஒழிப்பு, மாற்றுப் பாலினத்தவர் உருமைகள், போன்ற கருத்துகளை தன் பாடல்கள் வழியாக வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் கட்டாய இராணுவப் பயிற்சியை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பயஸ் கலந்து கொண்டார். வியட்நாம் போருக்கு எதிராக போராடங்களில் கலந்து கொண்டார். போராட்டத்தின் ஒரு பகுதியாக வரிகொடா இயக்கத்தில் கலந்து கொண்டார். இருமுறை சிறை சென்றார். போராட்டங்களின் போது சக செயற்பாட்டாளரான டேவிட் ஹாலிஸ் என்பவரைச் சந்தித்தார். இருவரின் நட்பும் காதலாக மாறி 1968 இல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு பிள்ளையும் பிறந்தது. 1973 இல் இருவரும் பிரிந்தனர்.

மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து வங்கதேசம், இராக், ஈரான், பாத்தீனம் போன்ற நாடுகளுக்குச் சென்று மனித உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இசைக்கலைஞராகவும், போராட்டக்காரராகவும் இருக்கும் பயஸ் அரசியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார். நெல்சன் மண்டேலாவின் 90 ஆவது பிறந்த நாளுக்காக லண்டனில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஆப்பிரிக அமெரிக்கரான பராக் ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு 2010 ஆம் ஆண்டு முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சியை நடத்தினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Baez pronounces her surname /bz/, though it is commonly pronounced /ˈbɛz/.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baez, Joan (2009), And A Voice to Sing With: A Memoir, New York City: Simon & Schuster, p. 61, I gave Time a long-winded explanation of the pronunciation of my name which came out wrong, was printed wrong in Time magazine, and has been pronounced wrong ever since. It's not "Buy-ezz"; it's more like "Bize," but never mind.
  2. Wells, J. C. (2000). "Baez 'baɪez; baɪ'ez —but the singer Joan Baez prefers baɪz".. Harlow, England: Pearson Education Ltd.. 
  3. Baez, Joan (2024). When you see my mother, ask her to dance: poems. Boston: Godine. ISBN 978-1-56792-801-3.
  4. Ruhlemann, William (May 6, 2009). "Joan Baez – Biography". AllMusic. Archived from the original on December 6, 2013. Retrieved December 13, 2009.
  5. Hansen, Liane (September 7, 2008). "Joan Baez: Playing For 'Tomorrow'". NPR. Archived from the original on September 16, 2017. Retrieved September 15, 2017. Reinterpreting other musicians' songs is nothing new to Baez, who says she considers herself more an interpreter than a songwriter.
  6. Howell, Peter (2009). "Joan Baez gets her apology". Toronto Star. Archived from the original on January 1, 2016. Retrieved January 9, 2016.
  7. Broadus, Ray; Browne, Pat (2001). The Guide to United States Popular Culture. Popular Press. p. 56. ISBN 978-0879728212.
  8. "The song Joan Baez wrote about her breakup with Bob Dylan". faroutmagazine.co.uk (in அமெரிக்க ஆங்கிலம்). January 5, 2022. Archived from the original on February 6, 2023. Retrieved February 6, 2023.
  9. "Inductees: Joan Baez". Rock & Roll Hall of Fame. Archived from the original on December 21, 2016. Retrieved December 20, 2016.
  10. "Chronology". Joan Baez official website. Archived from the original on May 6, 2015. Retrieved January 13, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_பயஸ்&oldid=4295176" இலிருந்து மீள்விக்கப்பட்டது