உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன்னா கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன்னா கோல்
பிறப்புஜோனா ரீட் பாசிலியா
(1944-08-11)ஆகத்து 11, 1944
நுவார்க், அமெரிக்கா
இறப்புசூலை 12, 2020(2020-07-12) (அகவை 75)
சியோக்ஸ் நகரம், அயோவா, அமெரிக்கா.
தொழில்
  • எழுத்தாளர்
  • நூலகர்
கல்விநியூயார்க் நகரக் கல்லூரி
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி மேஜிக் ஸ்கூல் பஸ்

ஜோனா கோல் (Joanna Cole, 11 ஆகத்து 1944) – 12 யூலை 2020) [1] என்பவர் சிறார்களுக்கு எழுதிய ஒரு அமெரிக்க எழுத்தாளராவார்.[2] 13 நாடுகளில் 93 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான மேஜிக் ஸ்கூல் பஸ் தொடர் நூல்களின் ஆசிரியராக நன்கு அறியப்பட்டவர். இவர் தனது முதல் புத்தகமான காக்ரோச்சஸ் முதல் புரூஸ் டெகன் வரைந்த விளக்கப்படங்களுடன் வெளியான இவரது பிரபலமான தொடரான மேஜிக் ஸ்கூல் பஸ் வரை 250 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

துவக்க கால வாழ்க்கை

[தொகு]

கோல் அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலுள்ள நியூவார்க்கில், இல்லத்தரசியான எலிசபெத் (ரீட்) மற்றும் வீடுகளுக்கு வெள்ளையடிப்பவரான மரியோ பாசிலியா ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவர் கிழக்கு ஒரேஞ்சு புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார்.[3] இவர் குழந்தைப் பருவத்திலிருந்து அறிவியலை விரும்பினார். இவரது ஆசிரியரான திருமதி ஃபிரிசல் ஒவ்வொரு வாரமும் தனது அறிவியல் புத்தகங்களில் ஒன்றைப் பார்க்க மாணவர்களை அனுமதித்தார். "மகிழ்ச்சிக்காக அறிவியல் புத்தகங்களைப் படிப்பது ஒரு சாதாரண விஷயம் என்று நான் நினைத்தேன்" என்று கோல், கூறுகிறார். குழந்தைப் பருவத்தில் இவர் தன் கொல்லைப்புறத்தில் உள்ள பூச்சிகள், தாவரங்கள் போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்தார். கோல் பள்ளி வாழ்கையை இரசித்தார், மேலும் வகுப்பிற்கு அறிவியல் அறிக்கைகளை எழுதுவதையும் ரசித்து செய்தார்.[3] குழந்தையாக இருந்தபோது இவருக்குப் பிடித்த புத்தகமாக "பக்ஸ், இன்செக்ட்ஸ் அண்ட் சச்" இருந்தது. கோல் தனது கொல்லைப்புறத்தில் பூச்சிகளைப் பார்த்து ஆராய்வதை விரும்பியதால், இது இவரது அத்தையிடமிருந்து பரிசாகக் கிடைத்தது.

1965 ஆம் ஆண்டு, இவர் பிலிப் ஏ. கோலை மணந்தார். [4] இவர் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் 1967 ஆம் ஆண்டு நியூயார்க் நகரக் கல்லூரியில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை]

தொழில்

[தொகு]

தன் பட்டப்படிப்புக்குப் பிறகு, இவர் புரூக்ளின் தொடக்கப்பள்ளியில் நூலகராக ஆனார். [5] பின்னர் கோல் பின்னர் நியூஸ்வீக்கில் கடித நிருபராகவும், பின்னர் ஸ்காலஸ்டிக்கில் உள்ள சீசா புத்தகக் கழகத்தின் இணை ஆசிரியராகவும், பின்னர் டபுள்டே புக்ஸ் ஃபார் யங் ரீடர்ஸின் மூத்த ஆசிரியராகவும் ஆனார்.[6] [7] 1980 ஆம் ஆண்டு சுதந்திர எழுத்தாளராக மாறி, சிறார்களுக்கான புத்தகங்களையும், பேரண்ட்ஸ் பத்திரிகைக்கு கட்டுரைகளையும் எழுதினார்.[5] இவரது முதல் சிறார் புத்தகம் கரப்பான் பூச்சிகளைப் பற்றியது, அது 1971 இல் வெளியானது. அந்த நேரத்தில் பூச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் இல்லாததால் கோல் "காக்ரோச்சஸ்" என்ற அந்தப் புத்தகத்தை எழுத முடிவு செய்தார்.[8] 1980 ஆம் ஆண்டு முழுநேரமாக சிறார் புத்தகங்களை எழுத முடிவு செய்தார். பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் படிக்கதக்க "ஹவ் யூ வர் பார்ன்" (1984) மற்றும் "யுவர் நியூ பாட்டி" (1989) ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார். சிறார் புத்தகங்களை எழுதும் போது கோல் எப்போதும் தன் வாசகர்களின் மன நிலையை மனதில் வைத்து எழுதுவார். தான் குழந்தையாக இருந்தபோது தான் ரசித்ததை ஒரு பணியாகச் செய்வது ஒரு பாக்கியம் என்று அவர் கூறினார்.[3]

தி மேஜிக் ஸ்கூல் பஸ்

[தொகு]

முதல் மேஜிக் ஸ்கூல் பஸ் புத்தகம் 1985 இல் எழுதப்பட்டு அடுத்த ஆண்டு வெளியானது. இவரும் ஓவியர் புரூஸ் டெகனும் முதல் 10 தலைப்புகளில் பணியாற்றியபோது ஒரு புத்தகத்திற்கு ஒரு ஆண்டுக்கும் மேலாக செலவிட்டனர். முதல் மேஜிக் ஸ்கூல் பஸ் புத்தகம் தொடங்குவதில் கோல் பதட்டமாக இருந்தார், "என்னால் வேலை செய்யவே முடியவில்லை. அலமாரிகளைச் சுத்தம் செய்தேன், கடிதங்களுக்கு பதிலளித்தேன், கடைக்குச் சென்றேன் - உட்கார்ந்து எழுதுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் நான் பயந்தாலும் இறுதியில் அதைச் செய்தேன்" என்று கூறினார். அறிவியல் அம்சம் இல்லாவிட்டாலும் வாசகர்கள் ரசிக்கும் கதைகளைச் சொல்லும் அறிவியல் புத்தகங்களை எழுத விரும்புவதாகவும் இவர் கூறினார்.[8] மேஜிக் ஸ்கூல் பஸ் புத்தகத்தை எழுதும் போது கோல் முதலில் எழுதுவார், பின்னர் அவரும் டெகனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துப் பார்ப்பார்கள். கோல் அகற்றக்கூடிய ஒட்டுப் பட்டையில் மேலும் சொற்களை எழுதுவார். அதை அவர் முன்பு எழுதியவற்றின் மேல் வைப்பார். தான் எழுதிய ஏதாவது ஒன்று பிடிக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக ஒட்டுப் பட்டையில் இருப்பது பொருத்தமாக இருக்கலாம் என்று நினைத்தார்.

மேஜிக் ஸ்கூல் பஸ் நூல் வரிசை தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றது. அது பல மொழிகளில் மில்லியன் கணக்கான பிரதிகள் விற்றுள்ளது. இந்தத் தொடரின் அண்மைய பகுதி தி மேஜிக் ஸ்கூல் பஸ் எக்ஸ்ப்ளோரஸ் ஹ்யூமன் எவல்யூஷன் (2020). [9] கோல் தனக்குப் பிடித்தமான தி மேஜிக் ஸ்கூல் பஸ் புத்தகமாக இன்சைட் தி எர்த் என்று கூறினார்.

இந்தப் புத்தகத் தொடர் லில்லி டாம்லின் ("திருமதி. ஃப்ரிஸில்" ஆக) குரல் கொடுத்து ஒரு சலனப்படத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. இது 1994 இல் தொடங்கி 3 ஆண்டுகள் ஓடியது. 2017 ஆம் ஆண்டில், இந்தப் புத்தகங்கள் கேட் மெக்கின்னனின் ("ஃபியோனா ஃபெலிசிட்டி ஃப்ரிஸில்" ஆக) குரலில் தி மேஜிக் ஸ்கூல் பஸ் ரைட்ஸ் அகெய்ன் என்ற நெட்ஃபிக்ஸ் தொடராக தழுவி எடுக்கப்பட்டன.[10]

இது காணொளி விளையாட்டுத் தொடராக 1994 முதல் 2010 வரை பல வன்பொருள் தளங்களுக்காக வெளியிடப்பட்டது.

வரவேற்பு

[தொகு]

கோலின் பெரும்பாலான புத்தகங்கள் ஏ.எல்.ஏ குறிப்பிடத்தக்கவையாக ஆகி என்.எஸ்.டி.ஏ / சி.பி.சி அபுனைவுக்கான விருதுகளைப் பெற்றன. 1971 ஆம் ஆண்டு தனது அபுனைவு குழந்தைகள் புத்தகங்களுக்காக கோல் வாஷிங்டன் போஸ்ட் / குழந்தைகள் புத்தகக் கைடைப் பெற்றார்.[3] [11] இவரது புத்தகங்களான "எ கேட்ஸ் பாடி" மற்றும் "எ பேர்ட்ஸ் பாடி" ஆகியவை ஜூனியர் லிட்ரரி கய்ல்ட்டுகுத் தேர்ந்தெடுக்கப்பட்டன. [11]

இறப்பு

[தொகு]

கோல் 2020 சூலை 12 அன்று தனது 75 வயதில் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் இறந்தார். [12]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

தி மேஜிக் ஸ்கூல் பஸ் தொடர்

[தொகு]

ரெடி, செட், டாக்ஸ்! சீரிஸ்

[தொகு]

—ஸ்டெஃபனி கால்மென்சனுடன் இணைந்து எழுதப்பட்டது

  • No Dogs Allowed (2014)
  • Teacher's Pet (2015)
  • Hot Diggity Dogs (2016)

த அட்வென்சர்ஸ் ஆப் ஆலி அண்ட் ஆமி சீரிஸ்

[தொகு]

—ஸ்டெஃபனி கால்மென்சனுடன் இணைந்து எழுதப்பட்டது

  • The Best Friend Plan (2020)
  • Rockin' Rockets (2020)
  • Stars of the Show (2021)

கிளௌன்-அரவுண்ட்ஸ் சீரிஸ்

[தொகு]
  • The Clown-Arounds (1981)[13]
  • The Clown-Arounds Have a Party (1982)[14]
  • Get Well, Clown-Arounds! (1982)[15]
  • The Clown-Arounds Go On Vacation (1983)[16]
  • Sweet Dreams, Clown-Arounds! (1985)[17]

கேட்டர் கேர்ள்ஸ் சீரிஸ்

[தொகு]

—ஸ்டெஃபனி கால்மென்சனுடன் இணைந்து எழுதப்பட்டது

  • The Gator Girls (1995)
  • Rockin' Reptiles (1997)
  • Get Well, Gators (1998)
  • Gator Halloween (2001)

மான்ஸ்டர் சீரிஸ்

[தொகு]
  • Monster Manners (1985)
  • Monster Movie (1987)
  • Monster Valentines (1990)

மற்ற புத்தகங்கள்

[தொகு]
  • Cockroaches (1971)
  • My Puppy is Born (1973)
  • Plants in Winter (1973)
  • A Calf is Born (1975)
  • Dinosaur Story (1976)
  • A Chick Hatches (1976)
  • Fun on Wheels (1977)
  • A Fish Hatches (1978)
  • A Frog's Body (1980)
  • A Horse's Body (1981)
  • Golly Gump Swallowed a Fly (1982)
  • A Cat's Body (1982)
  • A Bird's Body (1982)
  • An Insect's Body (1984)
  • A New Treasury of Children's Poetry (1984)
  • How You Were Born (1984)
  • Night Time Animals: As Large as Life (1985)
  • Cuts, Breaks, Bruises and Burns: How Your Body Heals (1985)
  • A Dog's Body (1986)
  • Hungry, Hungry Sharks! (1986)
  • The Laugh Book (1986)
  • Doctor Change (1986)
  • Cars and How They Go (1986)
  • This is the Place for Me (1986)
  • தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்: Hide and Seek (1986)
  • Bony-Legs (1986)
  • Norma Jean, Jumping Bean (1987)
  • Mixed-Up Magic (1987)
  • Hank and Frank Fix Up the House (1988)
  • Asking About Sex and Growing Up: A Question-and-Answer Book for Boys and Girls (1988)
  • The Read-Aloud Treasury (1988)
  • The Missing Tooth (1988)
  • Aren't You Forgetting Something, Fiona? (1988)
  • A Snake's Body (1989)
  • Evolution (1989)
  • Anna-Banana: 101 Jump-Rope Rhymes (1989)
  • Your New Potty (1989)
  • A Gift from Saint Francis: The First Creche (1989)
  • It's Too Noisy! (1989)
  • Safe from the Start: Your Child's Safety from Birth to Age Five (1989)
  • Bully Trouble (1989)
  • Animal Sleepyheads: One to Ten (1989)
  • Don't Call Me Names! (1990)
  • Buster Cat Goes Out (1990)
  • Miss Mary Mack and Other Children's Street Rhymes (1990)
  • Don't Tell the Whole World! (1990)
  • A Scary Book (1991)
  • The Eentsy, Weentsy Spider: Fingerplays and Action Rhymes (1991)
  • Large as Life Animals (1992)
  • Big Goof and Little Goof (1992)
  • Pat-a-Cake and Other Play Rhymes (1992)
  • Parents Book of Toilet Training (1993)
  • Six Sick Sheep: 101 Tongue Twisters (1994)
  • Crazy Eights and Other Card Games (1994)
  • You Can't Smell a Flower with Your Ear! (1994)
  • A Pocketful of Laughs: Stories, Poems, Jokes and Riddles (1995)
  • Spider's Lunch: All About Garden Spiders (1995)
  • Why Did the Chicken Cross the Road? and Other Riddles, Old and New (1995)
  • Who Put the Pepper in the Pot? (1995)
  • My New Kitten (1996)
  • Monster and Muffin (1996)
  • Riding Silver Star (1996)
  • Why Does Water Wiggle?: Learning About the World (1997)
  • Bug in a Rug: Reading Fun for Just-Beginners (1997)
  • Rain or Shine Activity Book: Fun Things to Make and Do (1997)
  • Marbles: 101 Ways to Play (1998)
  • Rockin' Reptiles (1998)
  • Your Insides (1998)
  • Get Well, Gators! (1998)
  • The New Baby at Your House (1999)
  • How I Was Adopted (1999)
  • Fun on the Run: Travel Games and Songs (1999)
  • More Tons of Fun (1999)
  • When You Were Inside Mommy (2001)
  • When Mommy and Daddy Go to Work (2001)
  • Simply Science (2003)
  • Yours Till Banana Splits: 201 Autograph Rhymes (2004)
  • Pin the Tail on the Donkey and Other Party Games (2004)
  • Sharing is Fun (2004)
  • My Big Boy Potty (2004)
  • My Big Girl Potty (2004)
  • My Friend the Doctor (2005)
  • I'm a Big Sister (2010)
  • I'm a Big Brother (2010)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Joanna Cole: biography". Scholastic Books. Archived from the original on October 7, 2012. Retrieved April 4, 2010.
  2. "Cole, Joanna". WorldCat.org. Archived from the original on November 22, 2018. Retrieved April 4, 2010.
  3. 3.0 3.1 3.2 3.3 Anita Silvey (1995). Children's Books and Their Creators. Houghton Mifflin Harcourt. p. 154. ISBN 0-395-65380-0.
  4. . 
  5. 5.0 5.1 Orange, B. Alan (July 15, 2020). "Joanna Cole Dies, The Magic School Bus Creator Was 75". Movieweb. Retrieved July 16, 2020.
  6. Tsioulcas, Anastasia (July 15, 2020). "'The Magic School Bus' Series Author Joanna Cole Has Died". NPR. Retrieved July 16, 2020.
  7. "Joanna Cole Papers". Archives & Special Collections, UConn Library. Retrieved July 16, 2020.
  8. 8.0 8.1 Greg Young (November 2004). A Guide for Using The Magic School Bus Inside a Hurricane in the Classroom. Teacher Created Resources. pp. 4–. ISBN 978-1-57690-089-5.
  9. Flock, Elizabeth (September 6, 2019). "The Magic School Bus is back — and it's tackling evolution". PBS. Retrieved July 16, 2020.
  10. Perez, Lexy (July 16, 2020). "Joanna Cole, Author of 'The Magic School Bus' Book Series, Dies at 75". Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/joanna-cole-dead-author-magic-school-bus-book-series-dies-at-75-1303345. Perez, Lexy (July 16, 2020). "Joanna Cole, Author of 'The Magic School Bus' Book Series, Dies at 75". Hollywood Reporter. Retrieved July 16, 2020.
  11. 11.0 11.1 About the author (1986). Scholastic. 1986. ISBN 9780590339964. Retrieved July 16, 2020.
  12. "'Magic School Bus' author Joanna Cole dies at age 75". WSVN 7News. July 15, 2020. Retrieved July 15, 2020.
  13. "The Clown-Arounds". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2023-08-05.
  14. "The clown-arounds have a party". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2023-08-05.
  15. "Get well, Clown-Arounds!". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2023-08-05.
  16. "The Clown-Arounds go on vacation". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2023-08-05.
  17. "Sweet dreams, Clown-Arounds!". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2023-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்னா_கோல்&oldid=4294858" இலிருந்து மீள்விக்கப்பட்டது