உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோனதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோனதான்
2021 இல் ஜோனதான்
இனம்சீசெல்ஸ் இராட்சத ஆமை
பால்ஆண்
நிறை100–150 கிலோகிராம்கள் (200–350 lb)

ஜோனதான் (குஞ்சு பொரித்த ஆண்டு அண். 1832 ) என்பது சீஷெல்ஸ் இராட்சத ஆமை ( ஆல்டப்ராச்செலிஸ் ஜிகாண்டியா ஹோலோலிசா ), இது ஆல்டப்ரா இராட்சத ஆமையின் ( ஆல்டப்ராச்செலிஸ் ஜிகாண்டியா ) துணை இனமாகும். 2025 நிலவரப்படி இதன் வயது 192 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் பழமையான நில விலங்கு ஆகும்.[1] ஜோனாதன் இப்போது தெற்கு அத்திலாண்ந்திக் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த பிரதேசமான செயிண்ட் எலனா தீவில் வசிக்கிறது.

வரலாறு

[தொகு]

ஜொனாதன், குஞ்சு பொரித்து அண். 1832, 1882 ஆம் ஆண்டு பிறந்ததாக கருதப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலில் உள்ள சீசெல்சில் (அப்போது மொரீசியசின் பிரித்தானிய கிரீட காலனியின் கீழ்) இருந்து செயிண்ட் எலினாவிற்கு சுமார் 50 வயதுடைய மூன்று ஆமைகளுடன் கொண்டு வரப்பட்டது. [2] 1930 களில் செயிண்ட் எலினா ஆளுநர் சர் ஸ்பென்சர் டேவிசால் இதற்குப் பெயரிடப்பட்டது. இது 31 ஆளுநர் பதவிக் காலங்களை கடந்து வாழ்ந்துள்ளது. இது தொடர்ந்து ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிளாண்டேஷன் அவுசின் மைதானத்தில் வசித்துவருகிறது; இது செயிண்ட் எலினா அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது. [2] இதன் சரியான வயது தெரியவில்லை, ஆனால் 2022 நவம்பரல், அப்போதைய செயிண்ட் எலினாவின் ஆளுநராக இருந்த நிகல் பிலிப்ஸ், இதற்கு திசம்பர் 4 ஆம் நாளை அதிகாரப்பூர்வ பிறந்தநாளாக அறிவித்தார்.

வயது

[தொகு]
ஜோனாதன் (இடது) மற்றொரு பெரிய ஆமையுடன் (1886) (வயது 53–54) [3]

1882 ஆம் ஆண்டு இந்த ஆமை செயிண்ட் எலினாவிற்கு கொண்டு வரப்பட்டபோது இது "முழுமையாக முதிர்ச்சியடைந்ததாக" இருந்ததால் இதன் வயது மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆமைகள் "முழுமையாக முதிர்ச்சியடைய" குறைந்தது 50 வயது ஆகும். இதைக் கொண்டு பார்க்கும்போது இது 1832 ஆம் ஆண்டுக்குள் குஞ்சு பொரித்து வெளிவந்திருக்கும் எனப்படுகிறது. [4] ஜோனாதன் இடம்பெற்றுள்ள ஒளிப்படம், முதலில் 1902 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது, உண்மையில் அது 1886 ஆம் ஆண்டு எடுக்கபட்டது.[5] ஜோனாதன் செயிண்ட் எலினாவிற்கு வந்து சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்படம் எடுக்கப்பட்டது. ஒளிப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளின்படி இது 1886 ஆம் ஆண்டு முழுமையாக முதிர்ச்சியடைந்ததாக முடிவுசெய்யபட்டது. [ மேற்கோள் தேவை ]

2022 ஆம் ஆண்டில், ஜோனதனின் மதிப்பிடப்பட்ட வயது, கின்னஸ் உலக சாதனைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிகப் பழமையானதாக அங்கீகரிக்கபட்ட ஆமையான துய் மலிலாவை விட அதிகமாகும். அது 1966 ஆம் ஆண்டு தொங்காவில் 189 வயதில் இறந்தது. இந்தியாவின் கொல்கத்தாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் 2006 ஆம் ஆண்டு இறந்த ஆல்டாப்ரா ராட்சத ஆமையான அத்வைதா, 255 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. [6]

ஊடகங்களில்

[தொகு]

செயிண்ட் ஹெலினா ஐந்து பைசா நாணயத்தின் பின்புறத்தில் ஜோனதன் படம் பொறிக்கப்பட்டுள்ளது. [7]

2015 முதல்

[தொகு]
பிளாண்டேஷன் அவுசுக்கு முன்னால் உள்ள புல்வெளியில் மேயும் ஜோனாதன் (2022)

2015 திசம்பரில், செயிண்ட் ஹெலினா கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ், ஜோனதன் "உயிருடன் இருக்கிறது [...] அது கண்புரையால் பார்வையில் சிக்கல், வாசனை முகரும் திறன் குறைந்த்துவிட்டது, ஆனால் இப்போதும் கேட்கும் திறன் நன்கு உள்ளது" என்று கூறினார். 2016 சனவரியில், ஜோனதனை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அதன் ஆயுளை நீட்டிக்கவும் புதிய உணவு வழங்கப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

2022 பிப்ரவரியில் ஜோனதனின் 190 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், தீவு அதிகாரிகள் தொடர்ச்சியான நினைவு முத்திரைகளை வெளியிடத் திட்டமிட்டனர். மேலும் பார்வையாளர்கள் அதன் அறியப்பட்ட முதல் கால்தடத்தின் ஒளிப்படத்தைக் கொண்ட சான்றிதழைப் பெற்றனர். [2]

2022 திசம்பர் 4 அன்று, உள்ளூர்வாசிகள் ஜோனதனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்தனர். அதற்குப் பிடித்த உணவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கேக்கை வழங்கினர். [8]

2024 சனவரியில், எடின்பர்க் பிரபு இளவரசர் எட்வர்ட், செயிண்ட் ஹெலினாவிற்கு பயணம் மேற்கொண்டபோது ஜோனதனைக் கண்டார். ஜோனதானை முன்பு 1947 இல் டியூக்கின் தாயார் இரண்டாம் எலிசபெத்தையும் தாத்தா ஜார்ஜ் ஆறாம்வரையும் சந்தித்தனர். இளவரசர் பிலிப் 1957 இல் வந்து பார்த்தார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Millward, Adam (27 February 2019). "Introducing Jonathan, the world's oldest animal on land at 187 years old". கின்னஸ் உலக சாதனைகள். Archived from the original on 9 August 2020. Retrieved 14 July 2020.
  2. 2.0 2.1 2.2 Gamillo, Elizabeth (4 February 2022). "At 190, Jonathan the Tortoise Is the World's Oldest". Smithsonian Magazine (in ஆங்கிலம்). Archived from the original on 5 September 2022. Retrieved 1 September 2022.
  3. "St Helena - Joining the Rest of Us". BBC. Archived from the original on 14 August 2018. Retrieved 14 August 2018. Earliest known photograph of Jonathan the 189 year old tortoise, taken in 1886
  4. "Oldest land animal (living)". Guinness World Records (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 1 September 2022. Retrieved 1 September 2022.
  5. "Your Opinion Counts". http://independent.saint.fm/wp-content/uploads/2016/04/St-Helena-Independent-20160408.pdf. Hollins, Jonathan (8 April 2016).
  6. "250-Year-Old Tortoise Dies In India". www.cbsnews.com. 24 March 2006. Archived from the original on 5 December 2022. Retrieved 5 December 2022.
  7. Debut, Béatrice (27 November 2017). "Jonathan, St. Helena's ancient tortoise, awaits visitors". Agence France-Presse. Archived from the original on 30 November 2017 – via The Jakarta Post. [Jonathan] appears on the island's five-pence coin
  8. "Tortoise Celebrates its 190th Birthday as the World's Oldest Land Animal". www.goodnewsnetwork.org. 3 December 2022. Archived from the original on 18 December 2022. Retrieved 5 December 2022.
  9. "Duke of Edinburgh meets oldest living terrestrial animal". www.telegraph.co.uk. 23 January 2024. Archived from the original on 27 March 2024. Retrieved 23 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனதான்&oldid=4344602" இலிருந்து மீள்விக்கப்பட்டது