ஜோத்தாபாய் படிக்கிணறு
தோற்றம்
| ஜேத்தாபாய் படிக்கிணறு | |
|---|---|
ஜேத்தாபாய் படிக்கிணற்றின் உட்புறக் காட்சி | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | ஈசான்பூர், அகமதாபாத் |
| புவியியல் ஆள்கூறுகள் | 22°58′28″N 72°36′12″E / 22.9745°N 72.6034°E |
| மாநிலம் | குஜராத் |
| மாநகராட்சி | அகமதாபாத் மாநகராட்சி |
| செயற்பாட்டு நிலை | செயல்பாட்டில் |
| பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம் இந்தியத் தொல்லியல் நினைவுச் சின்னங்களின் எண் N-GJ-45 |
ஜேத்தாபாய் படிக்கிணறு (Jethabhai's Stepwell) என்பது இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள ஈசான்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த படிக்கிணற்றை 1860களில் நிறுவியவர் ஜேத்தாபாய் மூல்ஜி எனும் பெண்மணி ஆவார். இப்படிகிணறு 210 அடி நீளம் மற்றும் 21-22 அடி அகலம் கொண்டது.
கட்டிடக்கலை
[தொகு]
இப்படிக்கிணறு நான்கு மண்டபங்களைக் கொண்டுள்ளது. மேலும் நுழைவாயில் மண்டபத்தின் மீது விதானம் (மேற்கூரை) அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3] 2017-18களில் இப்படிகிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சீரமைத்தது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jutta Jain-Neubauer (1 January 1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 56–57. ISBN 978-0-391-02284-3.
- ↑ "JETHABHAI NI VAV LIGHTS UP ON DEV DIWALI". Ahmedabad Mirror. 22 November 2010 இம் மூலத்தில் இருந்து 14 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141214092106/http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?articles=yes&pageid=6&max=true&articleid=Ar00602%C2%A7id=3edid=&edlabel=AMIR&mydateHid=22-11-2010&pubname=Mirror+-+Ahmedabad+-+City&title=JETHABHAI+NI+VAV+LIGHTS+UP+ON+DEV+DIWALI&edname=&publabel=MM.
- ↑ Manish, Kumar (24 October 2008). "BRT corridor runs into heritage hurdle". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/BRT-corridor-runs-into-heritage-hurdle/articleshow/3638350.cms.