ஜோதி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோதி
வகைமீயியற்கை
கனவுருப்புனைவு
நாடகத் தொடர்
கதைசுந்தர் சி.
இயக்கம்ராஜ்கபூர்
நடிப்புமேகா ஸ்ரீ
விஷ்ணு உன்னிகிருஷ்ணன்
சந்தனா
முகப்பிசை'ஜோதி'
நாடுஇந்தியா
மொழிதமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள்13
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுந்தர் சி.
குஷ்பூ
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
தொகுப்புசுதீப்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
அவினி சினிமேக்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்29 மே 2021 (2021-05-29) –
1 ஆகத்து 2021 (2021-08-01)
Chronology
தொடர்புடைய தொடர்கள்நந்தினி

ஜோதி என்பது சன் தொலைக்காட்சியில் மே 29 முதல் 1 ஆகத்து 2021ஆம் ஆண்டு வரை வாரயிறுதி நாட்களில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரபப்பான மீயியற்கை மற்றும் கனவுருப்புனைவு கலந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடர் நந்தினி[3] என்ற தொடரின் வழித் தொடராக சுந்தர் சி. மற்றும் குஷ்பூ ஆகியோர் சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் அவினி சினிமேக்ஸ் போன்ற நிறுவனங்களின் கீழ் தயாரிக்க, ராஜ்கபூர் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார்.

இந்த தொடரில் மேகா ஸ்ரீ,[4][5] விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் சந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சீமா, அனுராதா, கே. சிவசங்கர், அனு மோகன், சிங்கமுத்து போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 1 ஆகத்து 2021 அன்று 13 அத்தியாயத்துடன் நிறைவு பெற்றது.

இந்த தொடர் தமிழ் மொழியில் ஒளிபரப்புவதற்கு முன்பு தெலுங்கு மற்றும் வங்காளம்[6] மொழிகளில் ஒளிபரப்பானது. அத்துடன் கன்னடம்[7] மற்றும் மலையாள மொழிகளிலும் ஒளிபரபபானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]