ஜோதிலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோதி லட்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜோதி லட்சுமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். 1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் வழியாக வள்ளி பெயர் கொண்ட கதாபாத்திரத்தில்அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் மருமகளாவார். இவரது அத்தை டி. ஆர். ராஜகுமாரி ஆவார். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியோர் நடிகைகள் ஆவர்.[1] இவர் நடனபயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பல காலங்கள் திரையுலகில் இடைவெளி விட்டு நடிக்காமல் இருந்த இவர் சேது படத்தில் கான கருங்குயிலே பாட்டுக்கு ஆடி மீண்டும் திரையுலகில் வலம் வந்தார்.

மறைவு[தொகு]

68 வயதான ஜோதி லட்சுமி [2] இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சைப் பலனின்றி 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி காலமானார்!". veooz.com. பார்த்த நாள் 10 ஆகத்து 2016.
  2. "பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்". தி இந்து. பார்த்த நாள் 10 August 2016.
  3. "'ஜோதி'யானார் லட்சுமி!". மனம். பார்த்த நாள் 10 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிலட்சுமி&oldid=2227528" இருந்து மீள்விக்கப்பட்டது