ஜோதி ரௌத்
ஜோதி ரௌத் | |
|---|---|
2007-இல் ஜோதி ரௌத் | |
| பிறப்பு | 15 சூலை 1965 ஜோடா, ஒடிசா |
| பணி | இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நிகழ்த்து கலை கலைஞர், நடன அமைப்பாளர், நடன இயக்குநர் |
| வலைத்தளம் | |
| jyotikalamandir | |
ஜோதி ரௌத் (Jyoti Rout) (பிறப்பு சூலை 15,1965) ஓர் இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞரும், ஆசிரியரும் ஒடிசி நடன இயக்குநரும் ஆவார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஜோதி ரௌத் இந்தியாவின் ஒடிசாவிலுள்ள தொலைதூர நகரமான ஜோடாவில் வளர்ந்தார். நடனத்தின் மீது இவரது ஆர்வம் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கியது. பல்வேறு திருவிழாக்களின் போது உள்ளூர் பழங்குடி நடன நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டார். ஒடிசாவின் புவனேசுவரத்திலுள்ள உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் உள்ள இசை மற்றும் நடனக் கல்லூரியில் ஒடிசி நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் ஒடிசாவைச் சேர்ந்த தற்காப்புக் கலை நடன வடிவமான சாவ் நடனத்தை பயின்று நிகழ்த்திய முதல் பெண்களில் ஒருவராகவும் இருந்தார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]1993 ஆம் ஆண்டில், ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோயிலில் ஜெகன்நாதருக்காக நிகழ்த்திய முதல் நடனக் கலைஞர் ஜோதி ரௌத் ஆவார். 1997 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஒடிசி நடனப் பள்ளியான ஜோதி கலா மந்திர் என்ற இந்திய பாரம்பரிய கலைக் கல்லூரியை நிறுவினார்.[4] 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒடிசாவின் புவனேசுவரத்திலுள்ள இலிங்கிபூரில் ஒரு கிளையை நிறுவினார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jyoti Kala Mandir College of Indian Classical Arts".
- ↑ Connection, Sumathi, Saigan. "Profiles - Jyoti Rout - light of Odissi by Shalini Goel".
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Magic of Odissi dance by Jyoti Rout - My Theatre Cafe". Archived from the original on 2020-02-19. Retrieved 2017-01-02.
- ↑ 4.0 4.1 Chakra, Shyamhari (27 September 2011). "Jyoti Rout to open institute to promote Orissa culture". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/jyoti-rout-to-open-institute-to-promote-orissa-culture/article2492587.ece.
- ↑ "Jyoti Kala Mandir".
- ↑ International, Odissi (26 November 2010). "Odissi International: Dancers from Jyoti Kala Mandir, USA".