ஜோதிர்மோய் சிக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Jyotirmoyee Sikdar
Member of Parliament, Lok Sabha
பதவியில்
2004–2009
முன்னவர் Satyabrata Mookherjee
பின்வந்தவர் Tapas Paul
தொகுதி Krishnanagar
தனிநபர் தகவல்
பிறப்பு 11 திசம்பர் 1969 (1969-12-11) (அகவை 50)
Nadia, West Bengal
அரசியல் கட்சி All India Trinamool Congress
பிற அரசியல்
சார்புகள்
CPI(M)
வாழ்க்கை துணைவர்(கள்)
Avtar Singh (தி. 1994)
பிள்ளைகள் 1
இருப்பிடம் கொல்கத்தா
As of 17 September, 2006
Source: [1]

ஜோதிர்மோய் சிக்தர் (பிறப்பு: டிசம்பர் 11, 1969) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் விளையாட்டு வீராங்கனை. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் இருந்து 14 வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்த அவர், 2019 முதல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் உறுப்பினராக உள்ளார். 2009 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார், ஆனால் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனையான ஜோதிர்மோய் சிக்தர் 1995 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் பிரிவில் வெற்றி பெற்றார் . 1998 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீ மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும், 1998 ல் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இதே பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றார். [1] [2]

1998-1999 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்ற ஜோதிர்மோய் சிக்தருக்கு 2003 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1995 இல் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். [3] அவர் 2019 இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தின் டெபகிராமில் குருதாஸ் சிக்தார் மற்றும் நிஹார் சிக்தருக்கு 1969 டிசம்பர் 11ஆம் தேதியன்று ஜோதிமோய் சிக்தர் பிறந்தார். அவள் மேல்நிலை கல்வி வரை கல்வி பயின்றுள்ளார். 1994 பிப்ரவரி 9ஆம் தேதியன்று அவ்தார் சிங்கை மணந்தார் ஜோதிர்மோய் சிக்தர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். [5] {| class="wikitable sortable" style=" text-align:center; font-size:95%;" width="71%"

|- !ஆண்டு !போட்டி !இடம் !நிலை

!குறிப்புகள் |-


|- !colspan="5"|Representing  இந்தியா |-

|rowspan=4|1998 |rowspan=2|Asian Championships |rowspan=2|Fukuoka, Japan |bgcolor=cc9966|3rd |800 m |- |bgcolor=cc9966|3rd |1500 m |- |rowspan=2|Asian Games |rowspan=2|Bangkok, Thailand |bgcolor=gold|1st |800 m |- |bgcolor=gold|1st |1500 m |- |rowspan=2|1995 |rowspan=2|Asian athletic championship |bgcolore=gold|Jakarta, Indonesia |bgcolor=gold|1st |800 m |}

குறிப்புகள்[தொகு]

  1. Asian Games. GBR Athletics. Retrieved on 2011-08-20.
  2. Asian Championships. GBR Athletics. Retrieved on 2011-08-20.
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.
  4. "অভিমানেই লাল ছেড়ে তৃণমূলে সোনার মেয়ে".
  5. "Current Lok Sabha Members Biographical Sketch" (22 June 2006).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்மோய்_சிக்தர்&oldid=2938248" இருந்து மீள்விக்கப்பட்டது