ஜோதிமணி (சாதனையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோதிமணி கவுதமன் தமிழ்நாட்டின் வடகள்ளிப்பட்டி எனும் இடத்தைச் சேர்ந்த தமிழகத்தின் முதலாவது பெண் பார வண்டி ஓட்டுநர் ஆவார். ஒரு புதுத் துறையில் முன்னோடியான இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.[1][2] கணவரிடம் இருந்து வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட இவர் தற்போது சொந்தமாக ஒரு பார வண்டியை வாங்கி இயக்கி வருகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈரோடு பெண்ணுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது
  2. "தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை ஈரோடு கள்ளிப்பட்டி ஜோதிமணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.". ஆகத்து 15, 2015. தமிழ்வன், இந்தியா (ஆகத்து 15, 2015). பார்த்த நாள் 17 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிமணி_(சாதனையாளர்)&oldid=2715210" இருந்து மீள்விக்கப்பட்டது