ஜோதிபாய் பரியாதத்
| ஜோதிபாய் பரியாதத் | |
|---|---|
| பிறப்பு | ஜோதிபாய் 26 ஏப்ரல் 1965 பாலக்காடு, கேரளம் |
| தேசியம் | |
| பணி | எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வலைபதிவாளர் |
| வாழ்க்கைத் துணை/கள் | குண்டுவெட்டில் ஜனார்த்தனம். |
ஜோதிபாய் பரியாதத் (Jyothibai Pariyadath)[1][2][3] இந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளக் கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், வலைபதிவாளரும் ஆவார். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மரா என்ற கிராமத்தில் 26 ஏப்ரல் 1965 அன்று அந்திக்காடு புழுகோலோத் கிருஷ்ண பணிக்கர் மற்றும் நெம்மரா பரியாதத் சத்தியபாமா அம்மா ஆகியோரின் ஏழாவது குழந்தையாக பிறந்தார். இவர் வேதியியலில் பட்டம் பெற்றவர். மேலும், சமூகவியல் மற்றும் மலையாளத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் குண்டுவெட்டில் ஜனார்த்தனம் என்பவரை மணந்தார்.[4][5]
தொழில்
[தொகு]ஜோதிபாய் 2008 ஆம் ஆண்டு கலாகௌமுதி மற்றும் மாத்யமம் வார இதழ்கள் மூலம் தீவிரமாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக கேரள செயற்பாட்டாளர் மயிலம்மா எடுத்த போராட்டத்தைப் பற்றிய மயிலம்மொரு ஜீவிதம் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.[6] இந்த புத்தகம் எம். சுகுமாரன் என்பவரால் மயிலம்மா போராட்டமே வாழ்க்கை என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2007 இல் வெளியிடப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு பல்வேறு பல்கலைக்கழகங்களில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான ஆய்வுப் பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது.[7] ஜோதிபாய், புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் மாநிலக் குழு, ஒ. வே. விஜயன் சமாரகசமிதி, பாலக்காடு மாவட்ட பொது நூலகத்தின் உறுப்பினர் போன்ற பதவிகளில் இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Poetry in a sweet voice".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ജ്യോതിഭായ് പരിയേടത്തിന്റെ കവിത". Archived from the original on 27 January 2022. Retrieved 12 January 2022.
- ↑ "You can listen to poems on this blog in Kozhikode | Kozhikode News - Times of India". Timesofindia.indiatimes.com. 2015-09-12. Retrieved 2022-08-11.
- ↑ "O.V. Vijayan literary awards announced". 3 November 2020. https://www.thehindu.com/news/cities/Kochi/ov-vijayan-literary-awards-announced/article33009346.ece.
- ↑ "O.V. Vijayan awards to be given away today". 14 March 2021. https://www.thehindu.com/news/national/kerala/ov-vijayan-awards-to-be-given-away-today/article34065658.ece.
- ↑ "Mayilamma: The Life of a Tribal Eco-Warrior - -on a tribal widow who fights for cause | Chennai News - Times of India". 31 January 2019. https://timesofindia.indiatimes.com/city/chennai/mayilamma-the-life-of-a-tribal-eco-warrior-on-a-tribal-widow-who-fights-for-cause/articleshow/67775278.cms.
- ↑ "Book Review: Mayilamma –The Life of a Tribal-Eco Warrior". 13 February 2019.
- ജ്യോതിഭായ് പരിയേടത്തിന്റെ കവിത.[1] பரணிடப்பட்டது 27 சனவரி 2022 at the வந்தவழி இயந்திரம்
- You can listen to poems on this blog in Kozhikode [2]
- O.V. Vijayan literary awards announced [3]
- Mayilamma: The Life of a Tribal Eco-Warrior - -on a tribal widow who fights for cause [4]
- Book Launch: Mayilamma, The Life of an Eco-Tribal Warrior | Professor Swarnalatha and Mr. Sreejith [5]