ஜோதிட பழமொழிகள்
Appearance
- பத்தில் குரு பதவிக்கு இடர்
- இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
- பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
- நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
- சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
- வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
- கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
- ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
- குரு பார்க்க கோடி நன்மை
- கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
- மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
- பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
- மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
- துலா கேது தொல்லை தீர்க்கும்
- சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
- சுவாதி சுக்ரன் ஓயா மழை
- மறைந்த புதன் நிறைந்த கல்வி
- சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
- சித்திரை அப்பன் தெருவிலே
- பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
- விதி போகும் வழியே மதி போகும்.
- அவிட்டம், தவிட்டுப் பானையிலே பணம்
- குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
- சனி பார்த்த இடம் பாழ்
- சனி நீராடு
- விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
- ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
- பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
- எட்டில் சனி நீண்ட ஆயுள்
- சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
- அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
- குரு நின்ற இடம் பாழ்
- சனி பார்க்கும் இடம் பாழ்
ஆதாரம்
[தொகு]ஜோதிடப் பழமொழிகள் என்ற புத்தகம். ஆசிரியர் - அருண் பல்லவராயர். பதிப்பகம் - மாதவம் பதிப்பகம்