உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோஜு ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஜு ஜார்ஜ்
ஒரு நிகழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ்.
பிறப்புஜோசப் ஜார்ஜ்
22 அக்டோபர் 1977 (1977-10-22) (அகவை 48)
மாளா, கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கிறிஸ்து கல்லூரி, இரிஞ்ஞாலகுடா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • எழுத்தாளர்
  • இயக்குநர்
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள் - சிறப்புக் குறிப்பு (1)
கேரள மாநில திரைப்பட விருதுகள் (3)
வலைத்தளம்
www.jojugeorge.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

ஜோசப் "ஜோஜு" ஜார்ஜ் (பிறப்பு - அக்டோபர் 22, 1977) ஓர் இந்திய நடிகர், பின்னணிப் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

2015 ஆம் ஆண்டில், ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்ரா, லுக்கா சுப்பி ஆகிய திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்ததற்காக கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவரது ஜோசப் திரைப்படம் 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்புக் குறிப்பு பெற்றது. இவரது நடிப்பு, தயாரிப்புக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டில், ஜோஜூ திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். சார்லி, உதாஹரணம் சுஜாதா போன்ற படங்களைத் தயாரித்தார். பின்னர், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அப்பு பத்து பப்பு புரொடக்‌ஷன்ஸை வெற்றிகரமாகத் தொடங்கினார். இது அவரது பல படங்களைத் தயாரித்துள்ளது.

இளமை

[தொகு]

ஜோஜு, 1977 அக்டோபர் 22 அன்று, கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள மாலா என்னும் ஊரில் ஜார்ஜ் பரேச்சட்டில், ரோஸி ஜார்ஜ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். குழூரில் உள்ள அரசுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் இரிஞ்சலகுடா கிறிஸ்து கல்லூரியில் படித்தார். அதன் பிறகு, 1995 முதல் துணை நடிகராகவும் 1997 தொடங்கி உதவி இயக்குநராகவும் திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஜோஜு 2008 இல் அபாவை மணந்தார். இவருக்கு இயன், சாரா, இவான் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] 

விருதுகளும் முன்மொழிவுகளும்

[தொகு]
விருது ஆண்டு வகை திரைப்படம் முடிவு
தேசிய திரைப்பட விருதுகள் 2019 சிறப்புக் குறிப்பு (சிறப்புத் திரைப்படம்) ஜோசப் வெற்றி[2]
கேரள மாநில திரைப்பட விருதுகள் 2021 சிறந்த நடிகர் ஃபிரீடம் ஃபைட், நயட்டு, மதுரம், துறமுகம் வெற்றி
2015 சிறப்புக் குறிப்பு ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்திரா, லுக்கா சுப்பி
வெற்றி[3]
2018 சிறந்த குணச்சித்திர நடிகர் சோழா, ஜோசப்
வெற்றி[4]
கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது 2015 மிகவும் பிரபலமான திரைப்படம் சார்லி வெற்றி
2018 இரண்டாவது சிறந்த நடிகர் ஜோசப் வெற்றி
இரண்டாவது சிறந்த படம் ஜோசப் வெற்றி
பிலிம்பேர் விருதுகள் தெற்கு 2018 சிறந்த நடிகர் (மலையாளம்) ஜோசப் வெற்றி
2024 சிறந்த படம்-மலையாளம் இரட்ட பரிந்துரை
2024 சிறந்த நடிகர்-மலையாளம் இரட்ட பரிந்துரை
2024 சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது-மலையாளம் இரட்ட வெற்றி
2021 சிறந்த துணை நடிகர் நயட்டு வெற்றி
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2016 சிறந்த நகைச்சுவை நடிகர் (மலையாளம்) ஆக்சன் ஹீரோ பிஜு வெற்றி
2017 சிறந்த துணை நடிகர் (மலையாளம்) ராமன்டே எடந்தோட்டம் பரிந்துரை
2018 சிறந்த நடிகர் (மலையாளம்) ஜோசப் பரிந்துரை
எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர் (மலையாளம்) ஞான் மேரிக்குட்டி பரிந்துரை
2019 சிறந்த துணை நடிகர் (மலையாளம்) ஜூன் பரிந்துரை
2020 சிறந்த துணை நடிகர் (மலையாளம்) ஹலால் லவ் ஸ்டோரி வெற்றி[5]
ஏசியாநெட் திரைப்பட விருதுகள் 2017 சிறப்பு நடுவர் விருது (நடுவர்) உதஹரனம் சுஜாதா வெற்றி
2018 சிறப்பு நடுவர் விருது (நடுவர்) ஜோசப் வெற்றி
வனிதா திரைப்பட விருதுகள் 2017 மிகவும் பிரபலமான திரைப்படம் உதாஹரனம் சுஜாதா வெற்றி
2018 ஆண்டின் சிறந்த நடிகர் ஜோசப் வெற்றி
சிபிசி திரைப்பட விருதுகள் 2018 சிறந்த நடிகர் ஜோசப் வெற்றி
ஆசியாவிசன் விருதுகள் 2018 சிறந்த குணச்சித்திர நடிகர் ஜோசப் வெற்றி
பிளவர்ஸ் இந்திய திரைப்பட விருதுகள் 2018 சிறந்த குணச்சித்திர நடிகர் உதாரணம் சுஜாதா,
ராமன்டே ஈடன்தோட்டம்
வெற்றி
சமூகப் பொறுப்பு பற்றிய சிறந்த படம் உதாஹரனம் சுஜாதா வெற்றி
வட அமெரிக்க திரைப்பட விருதுகள் (NAFA) 2017 சிறந்த குணச்சித்திர நடிகர் ஆக்சன் ஹீரோ பிஜு வெற்றி
2018 எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர் ராமன்டே ஈடன்தோட்டம் வெற்றி
மூவிஸ்ட்ரீட் திரைப்பட விருதுகள் 2019 சிறந்த நடிகர் ஜோசப் வெற்றி
ரெட் எஃப்எம் மலையாள இசை விருதுகள் 2019 சிறந்த நாட்டுப்புறப் பாடல் பண்டு பாதவரம்பத்திலூடே (ஜோசப்) வெற்றி
10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2021 சிறந்த துணை நடிகர் ஹலால் லவ் ஸ்டோரி வெற்றி[6]
3வது டையோராமா சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பாரோ விருது 2021 சிறந்த நடிகர் நயட்டு வெற்றி[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mangalam - Varika 14-Mar-2016". Archived from the original on 14 March 2016. Retrieved 14 March 2016.
  2. "66th National Film Awards: Joju George receives special mention for 'Joseph'". The Times Of India. 23 December 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/66th-national-film-awards-joju-george-receives-special-mention-for-joseph/articleshow/72937604.cms. 
  3. "'Charlie' sweeps Kerala State film awards; 'Ozhivudivasathe Kali' adjudged Best film". The Hindu. 1 March 2016. https://www.thehindu.com/news/national/kerala/kerala-state-film-awards/article8300123.ece. 
  4. "'I dedicate the award to the directors': Joju George". 27 February 2019. https://www.thehindu.com/entertainment/movies/joju-george-on-his-state-film-award/article26386008.ece. 
  5. "SIIMA awards: Check out Malayalam winners of 2019 and 2020". Onmaorama. 20 September 2021. https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2021/09/20/siima-awards-malayalam-winners-list-2019-2020-films.html. 
  6. "SIIMA 2021: Complete Winners List". FWD. 20 September 2021. https://fwdlife.in/siima-2021-complete-winners-list. 
  7. "Rima Kallingal, Joju George, Nayattu win at Diorama Film Festival 2021". The News Minute (in ஆங்கிலம்). 2021-12-28. Retrieved 2022-07-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஜு_ஜார்ஜ்&oldid=4415553" இலிருந்து மீள்விக்கப்பட்டது