ஜோசப் முண்டச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோசப் முண்டச்சேரி (Joseph Mundassery) (17 சூலை 1903 - 25 அக்டோபர் 1977) ஒரு இலக்கிய விமர்சகரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மலையாள மொழி மற்றும் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவர். கேரள அரசியலில், 1957ஆம் ஆண்டின் முதல் இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் பொதுவுடைமை அமைச்சகத்தின் சர்ச்சைக்குரிய கல்வி மசோதாவின் பின்னணியில் இருந்த கல்வி அமைச்சராக இவர் நினைவுகூரப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜோசப் முண்டச்சேரி திருச்சூர் கந்தச்சங்கடவில் பிறந்தார். உள்ளூரில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இயற்பியலில் இளங்கலை பட்டமும் பின்னர் சமசுகிருதம், மலையாளம் ஆகிய மொழியில் முதுகலை பட்டமும் பெற்றார். 1952 வரை, திருச்சூர் புனித தோமையார் கல்லூரியில் வெளிநாட்டு மொழிகள் துறையின் தலைவராக இருந்தார்.

இவர், கொச்சி பிரஜமண்டலம் மூலம் அரசியலில் நுழைந்தார், 1948ஆம் ஆண்டில் கொச்சி சுதேச மாநிலத்தின் சட்டமன்ற மேலவை (எம்.எல்.சி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் செர்புவிலிருந்து 1954இல் திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார்.

1956இல் கேரள மாநிலம் உருவான பின்னர், 1957இல் மணலூரிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஈ.எம்.எஸ் அமைச்சகத்தில் கேரளாவின் முதல் கல்வி அமைச்சராக (1957–59) ஆனார். இறுதியாக, 1970இல், திருச்சூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கியப் பணிகள்[தொகு]

மலையாள இலக்கிய விமர்சனத் துறையில் நன்கு அறியப்பட்ட மூவரில் ஒருவராக முண்டச்சேரி இருந்தார். மற்றவர்கள் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை மற்றும் எம். பி. பால் ஆகியோர்.

ரூபர்பத்ரதா - முறையான சிறப்பைப் பற்றிய இவரது சர்ச்சைக்குரிய கோட்பாட்டின் மூலம், முண்டசேரி இலக்கியத் தத்துவத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தினார். அது மலையாளத்தில் கேள்விப்படாதது.

இவர் கேரள சாகித்ய அமைப்பின் தலைவராகவும் ( 1965-67), கேரள சாகித்ய அகாதமியின் நிர்வாக (மற்றும் நிறுவன) உறுப்பினராகவும் இருந்தார். கேரள சங்கீத நாடகா அகாதமியை நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் கேந்திர சாகித்ய அகாதமியின் உறுப்பினராகவும் இருந்தார்.

கல்வியாளராக[தொகு]

கல்வியாளராக முண்டசேரியின் குறிப்பிடத்தக்க தன்மை, இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது கேரளாவில் கல்வித்துறையில் கொண்டு வந்த ஓரளவு வெற்றி பெற்ற சீர்திருத்தங்களையே குறிக்கிறது. கேரளாவின் முதல் பொதுவுடைமை அமைச்சகத்தின் சர்ச்சைக்குரிய கல்வி மசோதாவை இவர் எழுதினார். முன்மொழியப்பட்ட மசோதா நேரடியாக 1959 இல் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் முதல் அமைச்சகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றத் தவறிய போதிலும், அதன் பல விதிகள் பின்னர் திருத்தங்களுடன் அடுத்தடுத்த அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகத்தின் கல்வி அமைச்சராக, கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அனுபவம் பெற்ற முண்டசேரி மாநிலத்தின் ஆரம்பகால பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரதான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் மறுசீரமைப்பதற்கும் முக்கிய பங்கு வகித்தார்.

திருச்சூரில் உள்ள புனித தோமையார் கல்லூரியில் பல மாணவர்களின் குருவாக இருந்தார். அவர்களில் கேரளாவின் வருங்கால தலைவர்களான செ. அச்சுத மேனன், மத்தாய் மஞ்சூரன் ஆகியோர் இருந்தனர்.

இறப்பு[தொகு]

முண்டச்சேரி 1977இல் இறந்தார்.

புத்தகங்கள்[தொகு]

Novels: Professor, Konthayil Ninnu Kurissilekku, Parappurathu Vithacha Vithu.

Literary Criticism: Kavyapeedhika, Manadandam, Mattoli, Manushyakathanugayikal, Vayanashalayil (3 parts), Rajarajante Mattoli, Natakantham Kavithwam Karinthiri, Kumaranasante Kavitha - Oru Padanam, Valltholinte Kavitha - Oru Padanam Roopabhadratha, Anthareeksham, Prayanam, Pashchathya Sahithya Sameeksha.

Short Stories: Sammanam, Kadaksham, Illapolice.

Travelogues: Ottanoottathil, China Munnottu.

Autobiography: Kozinga Elagal ( part I and part II ).

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_முண்டச்சேரி&oldid=3214271" இலிருந்து மீள்விக்கப்பட்டது