ஜோசப் கார்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவரது புகழ்
ஜோசப் கார்டைன்
கடவுளின் வேலைக்காரன்
கர்தினால்-டீக்கன், சான் மைக்கேல் ஆர்க்காங்கெலோ
Joseph Cardijn Colored.jpg
சபைகத்தோலிக்க திருச்சபை
ஆட்சி துவக்கம்25 பிப்ரவரி 1965 – 24 சூலை 1967
பின்வந்தவர்சேவியர் லோசானோ பராகான்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு22 செப்டம்பர் 1906
டெசிரோ-ஜோசப் மெர்சியர்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு21 பிப்ரவரி 1965
லியோ ஜோசப் சுனென்ச்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது22 பிப்ரவரி 1965
ஆறாம் பவுல்-ஆல்
கர்தினால் குழாம் அணிகர்தினால்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜோசப் லியோ கார்டைன்
பிறப்புநவம்பர் 13, 1882(1882-11-13)
சார்பீக், பிரசெல்சு, பெல்ஜியம்
இறப்பு24 சூலை 1967(1967-07-24) (அகவை 84)
லீவன், பிளமிஸ் பிராபர்ன்ட், பெல்ஜியம்
வகித்த பதவிகள்துசுரோச் ஆயர் (1965)
குறிக்கோளுரை("ஏழைகளுக்கு சேவை செய்ய")
புனிதர் பட்டமளிப்பு
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
பகுப்புகடவுளின் வேலைக்காரன்

ஜோசப் லியோ கார்டைன் (13 நவம்பர் 1882 - 24 சூலை 1967) ஒரு கத்தோலிக்க திருச்சபையை கர்தினால் மற்றும் இளம் கிறித்தவ தொழிலாளர்கள் (இகிதொ) இயக்கத்தின் நிறுவனர் ஆவார். [1] [2] கார்டைன் சமூக செயல்பாட்டிற்காக இளம் தொழிலார்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். [3]

வாழ்க்கை[தொகு]

குழந்தைப் பருவமும் கல்வியும்[தொகு]

லேக்கனில் கல்லறை.

பெல்ஜியம் நாட்டில் சார்பீக் என்னும் இடத்தில் ஜோசப் கார்டைன் 1882 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 தேதி இவர் பிறந்தார். [1] [2]

பல நாடுகள் பயணம்[தொகு]

கார்டைன் பல நாடுகளுக்கு தொடர்ந்து பயணித்துள்ளார் இளம் கிறத்தவ தொழிலாளர் இயக்கத்தை ஆரம்பிக்கவும் தொடர்ந்து செயல்படுத்தவும். 1958 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். அதில் மெல்பேர்ண் மற்றும் அடிலெய்ட் ஆகிய இடங்களில் இளம் தொழிலாளர்ள் நடத்திய பேரணிகளில் பேசினார். மேலும் ஒரு மறை 1966 இல் ஆத்திரேலியா சென்றார். [3] சூன் 1946 இல் அமெரிக்காவிற்கும் கோஸ்ட்டா ரிக்காவுக்கும் சென்றார். 1948 இல் வடக்கு ஆப்பிரிக்கா, 1953 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆசியாவில் இந்தியா மற்றும் இலங்கை சென்றார். மேலும் பல நாடுகளுக்கு சென்றார். [4] 24 பிப்ரவரி 1967 அன்று அவர் ஆங்காங் மற்றும் சப்பானுக்கு சென்றுவந்தார்.

செயல் முறையியல்கள்[தொகு]

கார்டைன் ஒரு புதிய திறனாய்வு முறையை கொண்டு வந்தார். ("நோக்கு-சீர்துக்கு-செயல்படு") இன்றைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றது. குறிப்பாக இளம் கிறித்தவ தொழிலாளர்கள் இளம் கிறித்தவ மாணவர்கள், மாணவர் கத்தோலிக்க செயல்பாடு, பவுலியன் சங்கம் மற்றும் பாம்ஸ் ஆத்திரேலியா . மற்றும் பல இயக்கங்கள். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Cardinal Joseph-Léon Cardijn". Santi e Beati.
  2. 2.0 2.1 "Biography". Catholicauthors.com.
  3. 3.0 3.1 "Cardinal Joseph Cardijn and the Young Christian Workers movement" (19 February 2012).
  4. "The life of Joseph Cardijn". Young Christian Workers.
  5. "Report on Latin American bishops' communication with the Pope". Clericalwhispers.blogspot.com (13 June 2007).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_கார்டைன்&oldid=3037517" இருந்து மீள்விக்கப்பட்டது