ஜோசப் ஆர்னால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் ஆர்னால்ட்
Joseph Arnold
ஜோசப் ஆர்னால்ட்
பிறப்பு28 திசம்பர் 1782
Beccles, Suffolk
இறப்பு26 சூலை 1818
சுமாத்திரா
தேசியம்பிரிட்டன்
துறைஇயற்கை வரலாறு

ஜோசப் ஆர்னால்ட் (Joseph Arnold, 28 திசம்பர் 1782 – 26 சூலை 1818, நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள், படாங், சுமாத்திரா) என்பவர் ஒரு கடற்படை மருத்துவர், இயற்கை ஆர்வலர் ஆவார். உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்றான இரஃப்லேசியா அர்னால்டி என்ற ஒட்டுண்ணித் தாவரத்தை ஆங்கில தாவரவியலாளர்களின் கவனத்திற்கு முதன்முதலில் கொண்டுசென்றவர். இவரின் மரணத்திற்குப் பின் இத்தாவரத்திற்கு இவரின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த தாவரத்தின் இவரது மாதிரி சேகரிப்பு லின்னியன் சொசைட்டியின் அருங்காட்சியகத்தில் உள்ளது.

தோல் பதனிடும் தொழிலாளியான எட்வர்ட் அர்னால்ட் மற்றும் ஹன்னா (இ. 1786) இணையரின் நான்காவது மகனாக இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள பெக்கிள்சில்ல் பிறந்தார். இவர் ஜான் லெமனின் இலவசப் பள்ளியில் பயின்றார். தன் பதினாறாவது வயதில் வில்லியம் கிரோஃபுட் என்ற மருந்தாளரிடம் பயிற்சி பெற்றார். ஆர்னால்ட் எடின்பரோவில் அறுவைச் சிகிச்சை பயின்றார். மேலும் 1806 இல் டி ஹைட்ரோதோரேஸ் (மார்பின் நீர்வீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது) பற்றிய ஆய்வறிக்கையுடன், எம்.டி பட்டம் பெற்றார். பின்னர் இவர் ராயல் கடற்படையில் சேர்ந்தார். மேலும் 1808 ஏப்ரல் முதல் 1809 பிப்ரவரி வரை எச்.எத்.எஸ் விக்டரி என்ற கப்பலில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். போர்ட்ஸ்மவுத்தில் டைபசிலிருந்து வந்து சேர்ந்த பிறகு, இவர் எச்.எம்.எஸ் ஹிந்தோஸ்தான் கப்பலில் அறுவை சிகிச்சை நிபுணராக நியமனம்பெற்றார். இக்கப்பல் நன்னம்பிக்கை முனை வழியாக சிட்னிக்குப் பயணம் செய்து, ஹார்ன் முனை மற்றும் ரியோ டி ஜெனிரோவுக்குத் திரும்பியது. லண்டனில் உள்ள சர் ஜோசப் பேங்கசுக்கு ஆர்னால்டை அறிமுகப்படுத்த ராயல் கடற்படையின் அலுவலரான வில்லியம் பிளிக் முன்வந்தார். 1811 ஆம் ஆண்டில், வீரியம் மிக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ஹஸ்லர் மருத்துவமனைக்கு இவர் அனுப்பப்பட்டார். பின்னர் இவர் மத்தியதரைக் கடலைச் சுற்றி எச்.எம்.எஸ் அல்க்மீன், எச்.எம்.எஸ் ஹைபர்னியா, எச்.எம்.எஸ் அமெரிக்கா ஆகிய கப்பலில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் இவர் வெசுவியஸ் பள்ளத்திற்கு விஜயம் செய்தார். அலெக்சாண்டர் மேக்லேயுடனான சந்திப்புக்குப் பிறகு இவருக்கு தென் அமெரிக்காவின் பூச்சிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. மேலும் இவர் 1814 ஆம் ஆண்டில் எச்.எம்.எஸ் நார்தம்பர்லேண்ட் என்ற கப்பலில் அறுவை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். மேலும் ரியோ டி ஜெனிரோவை அடைந்ததும் பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். இவர் 1815 இல் சிட்னியை அடைந்தார். 1815 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவர் சிட்னியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்ற முயன்று தோல்வியுற்றார். பின்னர் கப்பலில் இங்கிலாந்துக்குத் திரும்பிய போது இவர் படேவியாவில் சிக்கித் தவித்தார், கப்பல் தீப்பிடித்தது, அதனால் ஆர்னால்ட் தனது உடைமைகளின் பெரும்பகுதியை இழந்தார். இவருக்கு பெக்லசைச் சேர்ந்த சார்லஸ் அஸ்ஸே என்பவர் உதவினார். மேலும் போகோரில் தங்கி சில பூச்சி மாதிரிகளைச் சேகரித்தார். இவர் 1816 மேயில் இங்கிலாந்து திரும்பினார். அந்த நேரத்தில் இவர் வங்கியாளரும், தாவரவியலாளருமான டாசன் டர்னரை சந்தித்தார். 1818 ஆம் ஆண்டில், அவர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார் 1817 நவம்பரில் ஃபால்மவுத்திலிருந்து லேடி ராஃபிள்சில் பயணம் செய்த சர் இசுடாம்போர்டு இராஃபிள்சுடன் பணிபுரிந்தார். மேலும் லேடி ராஃபிள்ஸ் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உதவினார். அவர்கள் 1818 மார்ச் 19 அன்று பென்குலனை அடைந்தனர். ஆர்னால்ட் பின்னர் பஸ்மா உலு மன்னாவுக்குப் பயணித்தார். இந்த பயணத்தில் அவருக்கு மலேரியா நோய் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட போதிலும், இவர் கேப்டன் தாமஸ் ஓட்டோ டிராவர்சின் மனைவிக்கு மருத்துவ உதவி செய்தார். பின்னர் 1818 சூலை எட்டாம் நாள் பென்குலனுக்குத் திரும்பினார். பின்னர் இவர் குணமடைந்து மெனங்கபாவ் மலைப்பகுதிக்கு புறப்பட்டார். சூலை 30 அன்று ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் படாங்கிற்குச் சென்றபோதுதான் ஆர்னால்டின் மரணம் நான்கு பிறகு அவர்களுக்குத் தெரியவந்தது. இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தப்படவில்லை.[1]

மிகப்பெரிய பூக்கும் தாவரமான இரஃப்லேசியா அர்னால்டி, இவருக்காக பணிபுரியும் இந்தோனேசிய வழிகாட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆர்னால்டின் நினைவாக அந்தப் பூவுக்கு இவரின் பெயரிடப்பட்டது. ஆர்னால்ட் 1818 மே 19 இல் புலாவ் லெபரில் தாவரத்தைக் கண்டுபிடித்தார். 1818 சூலை ஒன்பதாம் நாளன்று ராஃபிள்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராபர்ட் பிரவுன் என்பவரால் இதற்கு அறிவியல் பெயர் இடப்பட்டது. டாசன் டர்னர், பெக்கல்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் ஆர்னால்டுக்கு சிற்பி பிரான்சிஸ் சாண்ட்ரேயால் நினைவுச்சின்னம் அமைக்கபட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Bastin, John (1973). "Dr Joseph Arnold and the discovery of the Rafflesia arnoldi in West Sumatra in 1818" (in en). Journal of the Society for the Bibliography of Natural History 6 (5): 305–372. doi:10.3366/jsbnh.1973.6.5.305. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-9778. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஆர்னால்ட்&oldid=3858262" இலிருந்து மீள்விக்கப்பட்டது