ஜோகிந்திரநாத் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகிந்திரநாத் மண்டல்
பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித்துறை அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 8 அக்டோபர் 1950
அரசர் ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பிரதமர் லியாகத் அலி கான்
தொழிலாளர் அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 8 அக்டோபர்1950
அரசர் ஆறாம் ஜார்ஜ்
குடியரசுத் தலைவர் லியாகத் அலி கான்
தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பொதுநல நாடுகள் & காஷ்மீர் விவகராங்களுக்கான அமைச்சர்
பதவியில்
1 அக்டோபர் 1949 – 8 அக்டோபர் 1950
அரசர் ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
கவாஜா நசிமுத்தீன்
பிரதமர் லியாகத் அலி கான்
தனிநபர் தகவல்
பிறப்பு (1904-01-29)29 சனவரி 1904
பரிசால் மாவட்டம்,

வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா

இறப்பு 5 அக்டோபர் 1968(1968-10-05) (அகவை 64)
பங்கோன், மேற்கு வங்காளம், இந்தியா
குடியுரிமை பிரித்தானிய இந்தியா (1904–1947)
பாகிஸ்தான் (1947–1950)
இந்தியா (1950-1968)
தேசியம் பாகிஸ்தானியர்
அரசியல் கட்சி அகில இந்திய முசுலிம் லீக்
படித்த கல்வி நிறுவனங்கள் கொல்கத்தா சட்டக் கல்லூரி
பணி அரசியல்வாதி

ஜோகிந்தார் நாத் மண்டல் (Jogendra Nath Mandal) (வங்காள மொழி: যোগেন্দ্রনাথ মণ্ডল; 29 சனவரி 1904 – 5 அக்டோபர் 1968), புதிய பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித் துறை அமைச்சராக 15 ஆகஸ்டு 1947 முதல் 8 அக்டோபர் 1950 முடிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். [1]பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்.[2] மேலும் காமன்வெல்த் & எல்லை விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் பாகிஸ்தான் நாட்டின் பட்டியல் வகுப்பினரின் தலைவராகவும் இருந்தவர்.[3]

ஜோகிந்திரநாத் மண்டல் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1950-இல் பாகிஸ்தான் நாட்டில் வாழும் பட்டியல் வகுப்பு இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து, தனது பதவி விலகல் கடிதத்தை எழுதி வைத்து விட்டு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். [4][5][6] [4] [5][6] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழ்ந்த ஜோகிந்தர்நாத் மண்டல் 1968-இல் மறைந்தார். இவர் நாமசூத்திரர் வகுப்பில் பிறந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]