ஜே. ஜே. சோபா
| தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழு பெயர் | ஜாவூர் ஜெகதீஷப்பா ஷோபா | ||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 14 சனவரி 1978 பசுபதிகள், கருநாடகம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||
| நிகழ்வு(கள்) | ஹெப்டதலான் | ||||||||||||||||||||||||||||||||||
| சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட சாதனை(கள்) | 6211 புள்ளிகள் (2004) | ||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||
ஜாவூர் ஜெகதீஷப்பா ஷோபா (Javur Jagadeeshappa Shobha) (பிறப்பு: ஜனவரி 14,1978) கருநாடகாவைச் சேர்ந்த ஓர் முன்னாள் ஹெப்டதலான் வீராங்கனையாவார். 2004-இல் இவர் அடைந்த 6211 புள்ளிகள் தடகள விளையாட்டுகளில் இவரது தேசிய சாதனையாக இருக்கிறது. ஷோபா 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மற்றும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகியவற்றில் நடந்த ஹெப்டதலான் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2004 ஆம் ஆண்டில் அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழில் வாழ்க்கை
[தொகு]2003 ஆம் ஆண்டில் தொடக்க ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹெப்டதலான் போட்டியில் ஷோபா வெற்றி பெற்றார்.[1]
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தனது செயல்திறனுக்காக இவர் கவனம் பெற்றார். அப்போட்டியில் இவர் ஏழு ஹெப்டதலான் நிகழ்வை முடித்தார். ஈட்டி எறிதல் இறுதி நிகழ்வில் காயமடைந்த போதிலும் திறம்பட முடித்தார். காயம் காரணமாக களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 800 மீட்டர் இறுதி நிகழ்வில் 3 வது இடத்தையேப் பிடித்தார். மேலும் ஒட்டுமொத்தமாக 11 வது இடத்தைப் பிடித்தார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடந்த ஹெப்டதலான் போட்டியில் 5749 புள்ளிகளைப் பெற்று 29 வது இடத்தைப் பிடித்தார்.[2]
சர்வதேசப் போட்டிகள்
[தொகு]| ஆண்டு | போட்டி | இடம் | நிலை | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|
| 2002 | ஆசியப் போட்டிகள் | கொழும்பு, இலங்கை | இரண்டாமிடம் | ஹெப்டதலான் | 5775 புள்ளிகள் |
| ஆசியப் போட்டிகள் | புசான் | மூன்றாமிடம் | ஹெப்டதலான் | 5870 புள்ளிகள் | |
| 2003 | ஆப்ரோ- ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ஐதராபாத்து | முதலிடம் | ஹெப்டதலான் | 5884 புள்ளிகள் |
| 2004 | ஒலிம்பிக் போட்டிகள் | ஏதென்ஸ் | 11வது இடம் | ஹெப்டதலான் | 6172 புள்ளிகள் |
| 2006 | ஆசியப் போட்டிகள் | தோகா | மூன்றாமிடம் | ஹெப்டதலான் | 5662 புள்ளிகள் |
| 2007 | ஆசியப் போட்டிகள் | அம்மான் | இரண்டாமிடம் | ஹெப்டதலான் | 5356 புள்ளிகள் |
| 2008 | ஆசிய உள்விளையாட்டுப் போட்டிகள் | தோகா | நான்காமிடம் | பென்டத்லான் | 3860 புள்ளிகள் |
| ஒலிம்பிக் போட்டிகள் | பெய்சிங் | 29ஆவது இடம் | ஹெப்டதலான் | 5749 புள்ளிகள் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "J. J. Shobha". Sports-Reference.com. Sports Reference LLC.
- ↑ "India at the Beijing Olympics". Rediff News. 2008-08-24. https://specials.rediff.com/sports/2008/aug/24slide3.htm.
வெளி இணைப்புகள்
[தொகு]
