ஜே. சிந்து ராணி
ஜே. சிந்து ராணி | |
|---|---|
| கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு, பால் கூட்டுறவு, உயிரியல் பூங்காக்கள், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 20 மே 2021 | |
| முன்னையவர் | கே. ராஜு |
| கேரள சட்டமன்ற உறுப்பினர் இந்தியா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 24 மே 2021 | |
| முன்னையவர் | முல்லாகர ரத்னகரன் |
| தொகுதி | சடையமங்கலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | கொல்லம், கேரளா, இந்தியா |
| தேசியம் | இந்திய |
| அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
ஜே. சிந்து ராணி (J. Chinchu Rani) கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு, பால் கூட்டுறவு, உயிரியல் பூங்காக்கள், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத் துறைகளின் கேரள அரசின் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்;[1] மே 2021 முதல் 15ஆவது கேரளச் சட்டமன்றத்தில் சடையமங்கலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிந்து ராணி, முண்டக்கல் பரணிக்காவு தெக்கேவிளையில் வெளியில் வடக்கத்தில் என். ஸ்ரீதரன், ஜெகதம்மா ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தவர்.[3] இவரின் தந்தை ஆரம்பகால கம்யூனிஸ்ட் ஆர்வலரும், முந்திரித் தொழிலாளர்கள் சங்க உறுப்பினரும் ஆவார்.[3] இவரின் கணவர் டி. சுகேசன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அஞ்சாலும்மூடு மண்டலச் செயலாளராகவும், நூலகப் பேரவையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.[3] இவர்களுக்கு நந்து சுகேசன், நந்தனா ராணி என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் இந்தியப் பொதுவுடமைக் தேசியக் குழு உறுப்பினராகவும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[3] மேலும், இவர் கேரள மகளிர் சங்க மாநிலத் தலைவராகவும், கோழிப்பண்ணைக் கழகத் தலைவராகவும் அச்சுத மேனன் கூட்டுறவு மருத்துவமனையின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 21 May 2021. Retrieved 21 May 2021.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2021-05-02.
- 1 2 3 4 5 6 ലേഖകൻ, മാധ്യമം (2021-05-19). "ജെ. ചിഞ്ചുറാണി; സി.പി.ഐയുടെ ആദ്യ വനിതാ മന്ത്രി" (in ml). www.madhyamam.com. https://www.madhyamam.com/opinion/articles/j-chinju-rani-cpis-first-woman-minister-799479.