ஜே. எஸ். கிரேவால்
ஜே. எஸ். கிரேவால் | |
|---|---|
2001-இல் ஜக்தார் சிங் கிரேவால் (படம்: அமர்ஜித் சந்தன்) | |
| பிறப்பு | 1927 சக் ஜேபி 46, பைசலாபாத், பஞ்சாப் மாகாணம் |
| இறப்பு | (அகவை 95) சண்டிகர், இந்தியா |
| பணி |
|
| விருதுகள் | பத்மசிறீ (2005) |
| கல்விப் பணி | |
| துறை | சீக்கிய வரலாறு |
| கல்வி நிலையங்கள் |
|
ஜக்தார் சிங் கிரேவால் (Jagtar Singh Grewal ) (1927 – 11 ஆகத்து 2022),[1] ஓர் இந்திய எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், அறிஞரும் ஆவார்; இவர் குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், சிம்லாவில் உள்ள இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[2][3] சீக்கிய ஆய்வுகளை ஒரு தனித் துறையாக நிலைநிறுத்திய அறிஞர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். கிரேவால் நாற்பது தனிநூல் தொகுதிகள், எட்டு கூட்டுநூல் தொகுதிகள், பதினேழு தொகுக்கப்பட்ட நூல்கள், பல ஆய்விதழ் கட்டுரைகள், தொகுப்பு நூல்களின் அத்தியாயங்களை எழுதியுள்ளார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கிரேவால், 1927-ஆம் ஆண்டு பஞ்சாப் கால்வாய் குடியேற்றப்பகுதியான லியால்பூரில் (தற்போது பாக்கித்தானின் பைசலாபாத் நகரம்) ஐந்து உடன்பிறப்புகளில் இளையவராகப் பிறந்தார். பாரசீகம், உருது மொழிகளைக் கற்ற பிறகு, இயற்பியல், கணிதப் பாடங்களைப் பயில்வதற்காக இவர் போர்மேன் கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இருப்பினும், இவர் அங்கு மாணவராக இருந்தபோது பஞ்சாப் பிரிவினை நிகழ்ந்தது; இதனால் இவரது படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது குடும்பத்தினர் கிழக்கு பஞ்சாபில் உள்ள லூதியானா பகுதிக்குக் குடிபெயர்ந்தனர் (இப்பகுதி இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக மாறியது); அதே வேளையில் இவரது சொந்த ஊர் பாக்கித்தானின் மேற்கு பஞ்சாப் பகுதியாக மாறியது. இந்தியாவில், இவர் லூதியானாவில் உள்ள அரசு கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார்; மேலும், தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பயிற்சி அதிகாரியாகச் சிறிது காலம் அரசுப் பணியில் பணியாற்றினார்.[3]
மறைவு
[தொகு]கிரேவால், 2022 ஆகத்து 11 அன்று தனது 95-ஆவது வயதில் காலமானார்.[1]
விருதுகள்
[தொகு]நூலாதாரங்கள்
[தொகு]- Goswamy, B. N.; Grewal, Jagtar Singh (1967). The Mughals and the Jogis of Jakhbar. Shimla: Indian Institute of Advanced Study.[4]
- J. S. Grewal (1969). Guru Nanak in History. Punjab University Press.
- J. S. Grewal (1998). Contesting Interpretations of the Sikh Tradition. Manohar Publishers. p. 315. ISBN 9788173042553.
- J. S. Grewal (1998). The Sikhs of the Punjab. The New Cambridge History of India. Cambridge University Press. pp. 308. ISBN 9780521637640.
- J. S. Grewal (2001). Maharja Ranjit Singh: Polity, Economy and Society. Guru Nanak Dev University. p. 112. ISBN 9788177700268.
- J. S. Grewal (2004). Social and Cultural History of the Punjab. Manohar Publishers. p. 185. ISBN 9788173045653.
- J. S. Grewal (2007). Sikh Ideology, Polity and Social Order. Manohar Publishers. p. 303. ISBN 9788173047374.
- J. S. Grewal, Veena Sachdeva (2007). Kinship and State Formation. Manohar Publishers. p. 112. ISBN 9788173047183.
- J. S. Grewal (2009). The Sikhs: Ideology, Institutions, and Identity. Oxford University Press India. p. 400. ISBN 9780195694949.
- J. S. Grewal (2012). Historical Writings on the Sikhs (1784-2011). SAB. ASIN B00A3K71R2.
இதனையும் காண்க
[தொகு]References
[தொகு]- 1 2 "Historian Grewal passes away". The Tribune. 11 August 2022. Retrieved 12 August 2022.
- ↑ "Religious Advisory Council". Tony Blair Faith Foundation. 2015. Archived from the original on 8 December 2015. Retrieved 1 December 2015.
- 1 2 3 4 5 Singh, G. (2022). Prof Jagtar Singh Grewal: An obituary. Sikh Formations, 18(3–4), 418–419. https://doi.org/10.1080/17448727.2022.2147659
- ↑ Parihar, Subhash (26 November 2023). "Kalā itihāsakāra nū yāda karadi'āṁ" (in pa). Punjabi Tribune. https://www.punjabitribuneonline.com/news/dastak/remembering-the-art-historian/.
மேலும் வாசிக்க
[தொகு]- Indu Banga. "J.S. Grewal on Sikh History, Historiography and Recent Debates". Institute of Punjab Studies, Chandigarh: 301–326. http://www.global.ucsb.edu/punjab/journal/v20_1_2/13-Indu%20Banga%2020.pdf. பார்த்த நாள்: 2 December 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Partition of Punjab – vs – Partition of India. – Dr. J S Grewal". யூடியூப் video. Patshahi. 18 September 2013. Retrieved 1 December 2015.