உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. எல். பி. ரோச் விக்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் லாடிஸ்லாஸ் பிட்சையா ரோச் விக்டோரியா (பி. செப்டம்பர் 26, 1894 - இ. அக்டோபர் 15, 1962)[1] ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரதவர் இனத்தில் பிறந்தார். இவர் மீன்பிடி தொழில் முதலான பலவகைத் தொழில்களில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 1926-46 காலகட்டத்தில் தூத்துக்குடி நகராட்சியின் தலைவராக ஐந்து முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2, 1949 - பெப்ரவரி 8, 1952 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தில்ன் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். (பி. எஸ். குமாரசுவாமிராஜா அமைச்சரவையில்). 1952 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948-49ல் ரோட்டரி சங்கத்தின் 320வது மாவட்டத்தின் (இலங்கை மற்றும் தென்னிந்தியா) ஆளுனராகவும் பணியாற்றினார். 1952ல் புனித கிரகோரி வீரர் அமைப்பின் (K.S.G -Order of St. Gregory the Great, வாடிகன் நகரின் கெளரவ வீரர் அமைப்புகளுள் ஒன்று) உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது.[2][3] தூத்துகுடியில் உள்ள ரோச் பூங்காவில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Debates; Official Report, Volume 48. Madras Legislative Council. 1962.
  2. "These Rotarians". The Rotarian 105 (4): 52. October 1964. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-838X. http://books.google.com/books?id=czMEAAAAMBAJ&pg=PA52. 
  3. Roche, Patrick. A. (1984). Fishermen of the Coromandel: a social study of the Paravas of the Coromandel. Manohar. p. 136.
  4. "Maintenance of Roche Park privatised". தி இந்து. 31 December 2005. Archived from the original on 4 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 1951/52 Madras State Election Results, Election Commission of India

வெளி இணைப்புகள்

[தொகு]