ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி
![]() ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மீள்தருகை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. | |
திட்ட வகை | வானியல் |
---|---|
இயக்குபவர் | விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் (நாசா)[1] / ஐசா / கனடிய விண்வெளி நிறுவனம் |
காஸ்பார் குறியீடு | 2021-130A |
சாட்காட் இல. | 50463[2] |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
திட்டக் காலம் | |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு |
|
ஏவல் திணிவு | 6,161.4 கிகி (13,584 இறா.)[5] |
பரிமாணங்கள் | 20.197 மீ × 14.162 மீ (66.26 அடி × 46.46 அடி) |
திறன் | 2 கி.வா |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 25 திசம்பர் 2021ஒ.ச.நே | , 12:20
ஏவுகலன் | ஆரியான் 5 ECA (VA256) |
ஏவலிடம் | கயானா விண்வெளி மையம், ELA-3 |
ஒப்பந்தக்காரர் | Arianespace |
Entered service | 12 சூலை 2022 |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | சூரியன்–பூமி L2 சுற்றுவட்டம் |
சுற்றுவெளி | ஏலோ சுற்றுவட்டம் |
அண்மைசுற்றுப்பாதை வீச்சு | 250,000 கிமீ (160,000 மைல்)[6] |
கவர்ச்சிசுற்றுப்பாதை வீச்சு | 832,000 கிமீ (517,000 மைல்)[6] |
சுற்றுக்காலம் | 6 மாதங்கள் |
Main telescope | |
வகை | கோர்சு தொலைநோக்கி |
விட்டம் | 6.5 மீ (21 அடி) |
குவிய நீளம் | 131.4 மீ (431 அடி) |
சேர்க்கும் பரப்பு | 25.4 மீ2 (273 ச.அடி)[7] |
அலைநீளங்கள் | 0.6–28.3 μm (செம்மஞ்சள் முதல் நடு-அகச்சிவப்புக் கதிர் வரை) |
Transponders | |
Band |
|
பட்டையகலம் |
|
![]() ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்டச் சின்னம் |
ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope, JWST) என்பது அகச்சிவப்பு வானியலை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி நோக்காய்வுக்கலம் ஆகும். விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கி இதுவாது. இதன் பெரிதும் மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்புத் தெளிவுத்திறன் மற்றும் உணர்திறன், ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் பார்க்க முடியாத மிகவும் பழைய, தொலைதூர அல்லது மங்கலான பொருட்களையும் பார்க்க அனுமதிக்கிறது. இதன் மூலம் முதல் விண்மீன்கள் மற்றும் முதல் விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் வாழக்கூடிய வெளிக்கோள்களின் விரிவான வளிமண்டலத் தன்மை போன்ற வானியல் மற்றும் அண்டவியல் துறைகளில் பரந்த அளவிலான ஆய்வுகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் இப்பணியை மேற்கொள்கிறது. இத்தொலைநோக்கிக்கு ஜேம்சு ஈ. வெப் என்பவரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது. இவர் 1961 முதல் 1968 வரை மெர்க்குரி, செமினி, அப்பல்லோ திட்டங்களை செயல்படுத்திய காலகட்டத்தில் நாசாவின் நிருவாகியாக இருந்தார்.
இத்தொலைநோக்கி 2021 திசம்பர் 25 அன்று ஆரியான் 5 ஏவுகலன் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது. இது 2022 சனவரியில் சூரிய-பூமி L2 லெக்ராஞ்சியப் புள்ளியை அடைந்தது.
இத்தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட முதலாவது படிமம் 2022 சூலை 11 இல் பொதுமக்களின் பார்வைக்கு விடுவிக்கப்பட்டது.[8] தெற்கு அரைக்கோளத்தில் இருந்து தெரியும் வானத்தின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கிய ஆழமான-புல புகைப்படம், பூமியிலிருந்து 4.6 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள வோலன்சு விண்மீன் குழாமில் உள்ள SMACS 0723 என்ற விண்மீன் பேரடைக் கொத்தை சித்தரிக்கிறது.[9][10] தொலைநோக்கியின் அண்மை அகச்சிவப்புப் புகைப்படக் கருவி (NIRCam) மூலம் இப்படம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகள் இப்படத்தில் காணப்படுகின்றன, இது இதுவரை எடுக்கப்பட்ட ஆரம்பகால அண்டத்தின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் படமாகும்.
திட்டசெலவு[தொகு]
இதன் திட்டம், ஆராய்ச்சி என அனைத்திற்குமான செலவு 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 17 நாடுகள் கூட்டுச்சேர்ந்து உள்ளன. இதில் முக்கியமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், மற்றும் கனடியன் விண்வெளி நிறுவனமும் பங்கு வகிக்கின்றன.
குவி ஆடிகள்[தொகு]
இதில் மொத்தமாக 18 அறுங்கோண வடிவிலான குவி ஆடிகள் பொருத்தப்படும், முதல் முயற்சியாக 2015 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முதல் ஆடி பொருத்தப்பட்டது. இந்த ஆடிகளில் ஒன்வொன்றும் எடை 40 கிலோ கிராம், 1.3 மீட்டர் சுற்றளவு கொண்டிருக்கும். ஆடிகள் அனைத்தும் பொருத்தப்பட்டபின்பு 6.5 மீட்டர் அளவு கொண்ட பெரிய ஒரே ஆடியாக காட்சி கொடுக்கும்.
ஒப்பீட்டு[தொகு]
கூட்டாளிகள்[தொகு]
பங்குபெரும் நாடுகள்
காட்சியகம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "NASA JWST "Who are the partners in the Webb project?"". NASA. 29 November 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ Kelso, Thomas S. (25 December 2021). "JWST". Celestrak. Celestrak. 18 January 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "FAQ Full General Public Webb Telescope/NASA". jwst.nasa.gov. 23 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "NASA Says Webb's Excess Fuel Likely to Extend its Lifetime Expectations – James Webb Space Telescope". blogs.nasa.gov. 6 January 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ StephenClark1 (23 December 2021). "The exact launch mass of the James Webb Space Telescope: 6161.4 kilograms. That figure includes 167.5 kg of hydrazine and 132.5 kg of dinitrogen tetroxide for the propulsion system" (Tweet). 23 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "JWST Orbit". JWST User Documentation. Space Telescope Science Institute. 11 July 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "JWST Telescope". James Webb Space Telescope User Documentation. Space Telescope Science Institute. 23 December 2019. 11 July 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ Fisher, Alise; Pinol, Natasha; Betz, Laura (2022-07-11). "President Biden Reveals First Image from NASA's Webb Telescope". NASA. 12 July 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-07-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Webb's first deep field" (ஆங்கிலம்). ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். July 12, 2022. 2022-07-12 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-07-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SRELICS". அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள். 2022-07-12 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-07-12 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Official NASA website / Official STScI website / Official French website
- JWST NASA – TRACKING Page − Launch to Final Calibrations (and more)
- JWST NASA – About page − Timeline details / Webb orbit / L2 / Communicating
- JWST Text – Most Critical Events – Launching and Deployment (2021)
- JWST Video (031:22): Highlights − Technical Engineering Details (2021)
- JWST Video (012:02): 1st Month – Launching and Deployment (animation; 2017)
- JWST Video (008:06): 1st Month − Launching and Deployment (update; 2021)
- JWST Video (003:00): 2nd Month − Mirror Alignment details (2/11/2022)
- JWST Videos (Mission Control Live) – Deployment Events − Now Successfully Completed (2022):
- LAUNCH (005:07; 25 Dec 2021) ⇒ SEPARATION (003:14; 25 Dec 2021) (mirror) ⇒ James Webb Space Telescope: Sunshield Deployment - Mission Control Live SUNSHIELD (152:45; 04 Jan 2022)] ⇒
- James Webb Space Telescope: Secondary Mirror Deployment - Mission Control Live SECONDARY MIRROR (087:15; 05 Jan 2022)] ⇒ James Webb Space Telescope: Primary Mirror Deployment – Mission Control Live PRIMARY MIRROR (242:29; 08 Jan 2022)] ⇒ News Update on James Webb Space Telescope's Full Deployment FINAL DEPLOYMENT (085:15; 08 Jan 2022)] ⇒
- Media Briefing: What’s Next for the James Webb Space Telescope ARRIVAL AT L2 (077:14; 24 Jan 2022)] ⇒ JAMES WEBB TELESCOPE First Photos, Data & Calibrations Explained TESTINGS & CALIBRATIONS ⇒ The First Thing That James Webb Will See FIRST LIGHT]