ஜேம்ஸ் மில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேம்சு மில்
முழுப் பெயர் ஜேம்சு மில்
பிறப்பு ஜேம்ஸ் மில்னி[1]
ஏப்ரல் 6, 1773(1773-04-06)
ஆங்கசு, இசுக்கொட்லாந்து
இறப்பு 23 சூன் 1836(1836-06-23) (அகவை 63)
கென்சிங்டன், இலண்டன்
காலம் 19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதி மேற்குலக மெய்யியல்
சிந்தனை மரபுகள் பயனெறிமுறைக் கோட்பாடு
தாராளமயம்
ரிக்கார்டியன் பொருளியல்
முக்கிய ஆர்வங்கள் உளவியல்
நன்னெறி
பொருளியல்

யேம்சு மில் (James Mill, பிறப்பு: ஜேம்சு மில்னி (James Milne,[1] 6 ஏப்ரல் 1773 – 23 சூன் 1836[2]) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளரும், பொருளியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் ரிக்கார்டியன் பொருளியல் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.[3] இவரது மகன் யோன் மில் ஒரு குறிப்பிடத்தக்க தாராளமய, பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலாளர் ஆவார்.

யேம்சு மில் இந்தியாவுக்கு எப்போதும் சென்றிருக்கவில்லை, ஆனாலும், 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வரலாறு என்ற ஆவணத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் தேடினார்.[4] இவரே முதன் முதலில் இந்திய வரலாற்றை இந்து, முசுலிம், பிரித்தானியா என மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.[2]

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர் தாராளமனப் போக்குடையவராகவும், பயன்பாட்டுக் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தார். இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்த 1833 பட்டயச் சட்டத்துக்கான ஆவணத்தை இவர் எழுதினார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Ball, Terence (19 June 2014). "James Mill". Stanford Encyclopedia of Philosophy. Stanford University. அணுகப்பட்டது 4 April 2018. 
  2. 2.0 2.1 Chisholm 1911, பக். 453.
  3. John Maynard Keynes. "The General Theory". The General Theory of Employment, Interest and Money. http://www.marxists.org/reference/subject/economics/keynes/general-theory/ch01.htm. பார்த்த நாள்: 4 April 2018. 
  4. Mill, James (1817), The History of British India (1 ), London: Baldwin, Cradock, and Joy, https://archive.org/stream/historyofbritish1817mill#page/n5/mode/2up, பார்த்த நாள்: 11 December 2012 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மில்&oldid=2699089" இருந்து மீள்விக்கப்பட்டது