ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்
James Clerk Maxwell.png
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் (1831–1879)
பிறப்பு சூன் 13, 1831(1831-06-13)
பிறப்பிடம் எடின்பர்க், ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு நவம்பர் 5, 1879 (அகவை 48)
இறப்பிடம் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
இனம் ஸ்காட்டியர்
கல்வி கற்ற இடங்கள் எடின்பரோ பல்கலைக் கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
அறியப்படுவது மக்ஸ்வெல்லின் சமன்பாடு
மக்ஸ்வெல்லின் பரம்பல்
Maxwell's demon
மக்ஸ்வெல்லின் வட்டு
மக்ஸ்வெல் வேகப் பரம்பல்
மக்ஸ்வெல்லின் தேற்றம்
Maxwell material
பொதுமைப்படுத்திய மக்ஸ்வெல் மாதிரி
இடம்பெயர் மின்னோட்டம்
சமயம் Evangelical anti-positivist
ஒப்பம் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்'s signature

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் (13 ஜூன் 1831 – 5 நவம்பர் 1879) ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. முதலாவது ஒன்றிணைப்பு நியூட்டனால் செய்யப்பட்டது.

மின் மற்றும் காந்தப் புலங்கள் வெளியினூடாக அலை வடிவில் செல்கின்றன என்றும், அவற்றின் வேகம் ஒளிவேகத்துக்குச் சமமானது என்றும் அவர் விளக்கினார்.1864ல் தானெழுதிய மின்காந்தப் புலத்தின் இயங்கியல் கோட்பாடு என்பதன் மூலம், மின் மற்றும் காந்தவியல் தோற்றப்பாடுகளைப் போலவே ஒளியும் அதே ஊடகத்தில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படுவதே என முன் மொழிந்தார். ஒன்றிணைந்த மின்காந்தவியல் மாதிரியை உருவாக்குவதில் இவருடைய பணிகள் இயற்பியலின் முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்று எனக் கருதப்படுகின்றது.

வளிமங்களின் இயங்கியல் கோட்பாட்டு அம்சங்களை விளக்குவதற்காக இவர் மக்ஸ்வெல்லின் பரம்பல் என அழைக்கப்படும் புள்ளியியல் முறையொன்றை உருவாக்கினார்.