ஜேம்ஸ் அண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜேம்ஸ் ஆண்டர்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜேம்ஸ் அண்டர்சன்
JIMMY ANDERSON.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜேம்ஸ் மைக்கல் ஜிம்மி அண்டர்சன்
பிறப்பு 30 சூலை 1982 (1982-07-30) (அகவை 37)
புருன்லி, லன்காஷயர், இங்கிலாந்து
உயரம் 6 ft 2 in (1.88 m)
வகை பந்து வீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 613) மே 22, 2003: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு சனவரி 7, 2011: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 172) திசம்பர் 15, 2002: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 9
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 57 137 118 188
ஓட்டங்கள் 524 183 818 276
துடுப்பாட்ட சராசரி 11.64 6.53 9.73 8.62
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 34 20* 37* 20*
பந்து வீச்சுகள் 12,056 6,804 22,363 9,124
இலக்குகள் 212 186 439 258
பந்துவீச்சு சராசரி 31.10 30.46 27.64 28.58
சுற்றில் 5 இலக்குகள் 10 1 22 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 1 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 7/43 5/23 7/43 5/23
பிடிகள்/ஸ்டம்புகள் 25/– 37/– 50/– 46/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன்: (James Michael Anderson, பிறப்பு: ஜூலை 30, 1982) (பொதுவாக ஜிம்மி அண்டர்சன் என்று அறியப்படுகிறார்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முன்னணி பெற்றுள்ள அண்டர்சன், 500 தேர்வு மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடத்தையும், பன்னாட்டு அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார். தற்போது ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை மொத்தம் 575 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ள அண்டர்சன், அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய தேர்வு பந்துவீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 இல் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின்போது இவரும் ஜோ ரூட்டும் இணைந்து 198 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 10வது இழப்பில் இணைந்து அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தவர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.

வலது கை விரைவு வீச்சாளரான இவர் தனது 20 ஆவது வயதில் 2002-2003 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடினார். சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 400 மற்றும் 500 இலக்குகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சூலை 25, 2016 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடியபோது ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி, இந்தியத் துடுப்பாட்ட அணி, நியூசிலாந்து துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்கு எதிராக 50 இலக்குகளை வீழ்த்திய முதல் விரைவு வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[1]

ஆகத்து 3,2017 இல் லங்காஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணி ஓல்டு டரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தின் காட்சி மாடத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்தது.[2] செப்டம்பர் 8, 2017 இல் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 500 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.

சாதனைகள்[தொகு]

முதல் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதில் 10 இலக்குகளை 3 போட்டிகளில் கைப்பற்றினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை ஐந்து இலக்குகளை வீழ்த்தியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சொந்தமண்ணில் 300 இலக்குகளை வீழ்த்திய முதல் விரைவு வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[3] 2017 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 62 ஆவது முறையாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் கொட்னி வோல்சுவின் சாதனையை முறியடித்தார். 500 தேர்வுத் துடுப்பாட்ட இலக்குக்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக இலக்குகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களின் வரிசையில் முதல் இடத்தையும், சர்வதேச அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார். அதிக வீரர்களை பவுல்டு மூலம் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. Scott Heinrich (31 December 2002). "Anderson on fast track". BBC Online. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/2282874.stm.  Retrieved on 26 June 2008.
  2. https://www.bbc.co.uk/sport/cricket/40823606
  3. "Amla's latest landmark, and Anderson's home comforts".
  4. "Anderson's hard yards set new record". ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/23007257/anderson-hard-yards-set-new-record. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_அண்டர்சன்&oldid=2783233" இருந்து மீள்விக்கப்பட்டது