உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்சு எட்வார்டு கீலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு எட்வார்டு கீலர்
James Edward Keeler
ஜேம்சு எட்வர்டு கீலர்
பிறப்பு(1857-09-10)செப்டம்பர் 10, 1857
லா சால், இலினொய்
இறப்புஆகத்து 12, 1900(1900-08-12) (அகவை 42)
சான் பிரான்சிஸ்கோ
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்லிக் வான்காணகம்
அலெகெனி வான்காணகம்
அறியப்படுவதுவானியற்பியல் இதழ்
சனியின் வளையங்கள்
வானொளிப்படவியல்
விருதுகள்என்றி டிரேப்பர் விருது (1899)

ஜேம்சு எட்வார்டு கீலர் (James Edward Keeler, செப்டம்பர் 10, 1857 – ஆகத்து 12, 1900) ஓர் அமெரிக்க வானியலாளர்.

வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

கீலர் 1888 முதல் இலிக் வான்காணகத்தில் பணிபுரிந்தார். 1891இல் அலெகனி வான்காணகத்தில் இயக்குநராக அமர்ந்ததும் அங்கிருந்து விலகினார். பிறகு 1898இல் இலிக் வான்காணகத்துக்கு இயக்குநராக வந்தார். 1900க்குப் பிறகு நெடுநாட்கள் இல்லாமல் இதற்குள் இயற்கை எய்தினார். அலெகனி வான்காணகத்தில் உள்ள 31 அங்குல தொலைநோக்கி அடியில் அவரது உடல்நீறு ஒரு குடலையில் வைக்கப்பட்டுள்ளது.

கீலர் ஜார்ஜ் ஃஏலுடன் இணைந்து வானியற்பியல் இதழைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தினார். அது இன்றும் மிகச் சிறந்த வானியல் இதழாக விளங்குகிறது.

அவரது தந்தையார் எஃப். வில்லியம் ஆவார்; தாயார் அன்னா நீத்தன் கீலர்.[1] அவர் 1891இல் மணம்புரிந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள்.

தகைமைகளும் பங்களிப்பும்

[தொகு]

கீலருக்கு 1899இல் என்றி டிரேப்பர் பதக்கத்தை அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் தந்தது.[2] இவர் 1900இல் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீலரும் பிறரும் உடன்தொடர, 1880இல் அலெகனி வான்காணக இயக்குநர் சாமுவேல் பியர்பான்ட் இலாங்லே விட்னி மலையின் கொடுமுடிக்கு அறிவியல் தேட்டப்பணிக்காகச் சென்றார். இத்தேட்டத்தின் நோக்கம் சூரியக் கதிர்வீச்சு புவி வளிமண்டலத்தில் குத்துயரத்தைப் பொறுத்து எப்படி வேறுபட்டவிகிதத்தில் உட்கவரப்படுகிறது என, உயர், தாழ்மட்ட உட்கவர் மதிப்புகளை ஒப்பிட்டு, ஆய்தலே ஆகும். இந்தத் தேட்டத்தால் 14,240 அடி உயரத்தில் உள்ள விட்னி மலையின் ஒரு கொடுமுடி "கீலர் ஊசி" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சனிக் கோள் வளையங்களுக்கிடையில் உள்ள சந்து கீலர் சந்து எனவும் செவ்வாயில் உள்ள ஒரு மொத்தல் குழிவாய் கீலர் குழிவாய் எனவும் நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் கீலர் குழிப்பள்ளம் எனவும், ஒரு சிறுகோள் 2261 கீலர் எனவும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. ISBN 978-0-387-31022-0. Retrieved August 22, 2012.
  2. "Henry Draper Medal". National Academy of Sciences. Retrieved 19 February 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_எட்வார்டு_கீலர்&oldid=4025237" இலிருந்து மீள்விக்கப்பட்டது