உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேனிஸ் பரியத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேனிஸ் பரியத்
பிறப்புஜோர்ஹாட், அஸ்ஸாம்
தொழில்எழுத்தாளர், கவிஞர்
மொழிஆங்கிலம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தரையில் படகுகள், கடற்குதிரை

இந்தியக் கவிஞர், எழுத்தாளர். அஸ்ஸாமில் பிறந்து மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் வளர்ந்தவர்.

தரையில் படகுகள் (Boats on Land) எனும் இவரது முதல் சிறுகதைத் தொகுதி 2013-ஆம் ஆண்டுக்கான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இளம் எழுத்தாளரின் படைப்புக்கான சாகித்திய அகாதமி விருதையும் சிறந்த புனைவுக்கான கிராஸ்வேர்ட் புக் விருதையும் வென்றது. மேகாலயாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற முதல் எழுத்தாளர் இவர்.

வாழ்வும் பணியும்[தொகு]

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாத்தில் பிறந்த பரியத் ஷில்லாங்கிலும் அஸ்ஸாமின் பல்வேறு தேயிலைத் தோட்டங்களிலும் வளர்ந்தார். ஷில்லாங்கின் லொரேடோ கான்வென்டிலும் அஸ்ஸாம் வேலி பள்ளியிலும் பயின்றார். பின்னார் தில்லி செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியிலிருந்து ஆங்கில இளங்கலைப் பட்டமும் SOAS, லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து கலை மற்றும் தொல்லியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 2010-இல் இவரால் துவங்கப்பட்ட Pyrta எனும் இணைய இலக்கிய இதழின் ஆசிரியர். Time Out, Delhi, The Caravan, Internatzionale போன்ற இந்திய மற்றும் பன்னாட்டு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

விருதுகள்[தொகு]

2013-இல் இவரது தரையில் படகுகள் எனும் முதல் சிறுகதைத் தொகுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இளம் எழுத்தாளரின் படைப்புக்கான சாகித்திய அகாதமி விருதையும் சிறந்த புனைவுக்கான கிராஸ்வேர்ட் புக் விருதையும் வென்றது. அதே ஆண்டில் Shakti Bhatt First Book பரிசுககான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றது. 2013-ஆம் ஆண்டின் Uday Lakhanpal உலகச் சிறுகதை விருதுக்கும், Tata Literature Live முதல் நூல் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்ட நூல்கள் பட்டியலில் இடம் பிடித்தது. இவரது கடற்கரை புதினம் The Hindu இலக்கியப் பரிசுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது.

எழுத்து-நடை[தொகு]

ஷில்லாங், சிரபுஞ்சி, அஸ்ஸாம் ஆகிய இடங்களை களனாகக் கொண்ட இவரது கதைகள் வடகிழக்கிந்தியாவில் 1850-களில் தொடங்கி மூன்று நூறாண்டுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை மீள் புனைவாக்கம் செய்பவை. நாட்டார் கூறுகளையும் மரபையும் ஊடுபாவாகக் கொண்டு சமூக-அரசியல் நிகழ்வுகளை விரித்துரைக்கும் பரியத்தின் எழுத்துக்கள் மாய யதார்த்தவாதம் சார்ந்தவை என்றும் ஹருகி முரகாமியின் எழுத்துக்களோடு ஒப்பிடத்தக்கவை என்றும் கருதப்படுகிறது. ஜீத் தையில் இவரது எழுத்துக்களை “மறைபொருள் உணர்த்துபவை, அசலானவை” என்று கூறுகிறார்.

படைப்புகள்[தொகு]

புனைவு[தொகு]

கடற்குதிரை (Seahorse) - புதினம்

தரையில் படகுகள் (Boats on Land) - சிறுகதைத் தொகுதி

கவிதை[தொகு]

மஞ்சள் முனை (The Yellow Nib)

கவி கலா : மெய்நிகர் கவிதைத் திட்டம் (The Virtual Poetry Project)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேனிஸ்_பரியத்&oldid=3596836" இலிருந்து மீள்விக்கப்பட்டது