உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேனட் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேனட் டெய்லர் (Janet Taylor) (13 மே 1804 – 25 ஜனவரி 1870[1]) (பிறப்புப் பெயர்: ஜேன் ஆன் அயோன் (Jane Ann Ionn) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் நாவாயியல் வல்லுனரும் ஆவார். இவர் தன் முனைவும் வெற்ரியும் தவழ்ந்த தன் வாழ்நாளில் பல வானியல், நாவாயியல் நூல்களை எழுதியுள்ளார். இத்துறைகளைப் பயிற்றுவிக்க ஒரு கல்விக்கழகத்தையும் நிறுவினார். நாவாயியல் கருவி ஆக்கம், பகிர்தல், பழுதுபார்தலுக்காக ஒரு கிடங்கை நட்த்தினார். இவரது கல்விக்கழகம் கிழக்கிந்தியக் குழுமத்தாலும் டிரினிட்டி இல்லத்தாலும் ஆட்சியமைப்பு அலுவலகத்தாலும் மதிக்கப்பட்டது மட்டுமலாமல் பரிந்துரைக்கவும் பட்டது. இவரது பணிகளை மதித்து இவருக்குப் பாரசீக அரசராலும் நெதர்லாந்து அரசராலும் விருதுகள் வழங்கப்பட்டன அகலாங்கையும் நெட்டாங்கையும் கணக்கிடுவதற்கான இவரது விதி மதிநுட்பம் வாய்ந்ததாக பலராலும் பாராட்டப்பட்ட்தாகும்.[2]

19 ஆம் நூற்றாண்டில் இலண்டனில் அறிவியல் கருவிகளை உருவாக்கிய சில பெண்மணிகளுள் இவர் ஒருவராவார்.[3] 1834 இல் பதிவுரிமம் பெற்ற இவரது "மீகாமரின் (Mariner's) கணிப்பான்", ஆட்சியமைப்பு அலுவலகத்தால் பின்னர் நீக்கப்பட்டது.[4] இவர் "இலண்டனைச் சேர்ந்த கடல்கடந்து வாழ்ந்த மக்களுக்காக தன் அரும்பெரும் உழைப்பை நல்கியதற்காக" 1860 பொதுவாழ்வு ஓய்வூதியம் வழங்கப்பட்டார் ".[4]

பணிகள்

[தொகு]
  • தொலைவுகளைக் கணக்கிடும் நிலா பட்டியல்கள்[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Find A Grave Index". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  2. Mary T. Brück (25 July 2009). Women in Early British and Irish Astronomy: Stars and Satellites. Springer. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9048124735. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  3. http://collections.rmg.co.uk/collections/objects/11082.html
  4. 4.0 4.1 {{cite journal | doi = 10.1017/S0007087410001512">John Croucher (2011). "Mrs Janet Taylor's ‘Mariner's Calculator’: assessment and reassessment". The British Journal for the History of Science 44 (04): 493–507. doi:10.1017/S0007087410001512. 
  5. Catharine M. C. Haines (1 January 2001). International Women in Science: A Biographical Dictionary to 1950. ABC-CLIO. pp. 307–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-090-1. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேனட்_டெய்லர்&oldid=3962260" இலிருந்து மீள்விக்கப்பட்டது