ஜேக் பிளாக் (எலி பிடிப்பவர்)

ஜேக் பிளாக் (Jack Black -rat catcher)19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் பேட்டர்சியா நகரைச் சேர்ந்த எலி பிடிப்பவரும் சிற்றெலிகளை அழிப்பவரும் ஆவார்.[1][2] இவர் வாழ்ந்த நேரத்தில், பயிர்களை அழிப்பதாகவும் நோயைப் பரப்புவதாகவும் எலிகளின் தொல்லையானது பெரிய அளவில் இங்கிலாந்தில் இருந்தது. இச்சூழலில் பிளாக்கின் எலி கொல்லும் திறன்கள் இவரைப் பிரபலமடையச் செய்யவும் விக்டோரியா இராணியின் அவையில் அதிகாரப்பூர்வ எலி பிடிப்பவராகவும் ஆக்கியது. இவர் எலிகளின் "மிகவும் மோசமான எதிரி" என்று அழைக்கப்பட்டாலும், இவர் அனைத்து எலிகளையும் கொல்லவில்லை.[3][2] பிளாக் வழக்கத்திற்கு மாறாக வண்ணமயமான எலிகளை இனப்பெருக்கம் செய்து அவற்றைச் செல்லப்பிராணிகளாக விற்றது, விலங்குகளை வளர்ப்பவர்கள் மத்தியில் இவரை ஈர்க்க பெரும் பங்கு வகிக்கித்தது. இவர் தனித்துவமான ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்டிருந்தார். பொதுவாகப் பச்சை நிற மேலாடையினையும் சிவப்பு நிற இடுப்பு ஆடையினையும் உலோக எலிச் சின்னம் பொறிக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தோல் பட்டையினால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட சீருடையினை அணிந்திருப்பார்.
வாழ்க்கை
[தொகு]சிறுவனாக, ஜேக் பிளாக் ரீஜண்ட்ஸ் பூங்காவில் காட்டு எலிகளைப் பிடித்து கம்பிக் கூண்டுகளில் விடுவார். இக்காட்சி காண்போர்களை ஈர்த்தது. இவர் ஆட்சியாளனைப் போல நடந்து கொண்டார். எலிகளைத் தனது சட்டையில் வைத்தும், கைகளில் மேலேயும் கீழேயும் ஊர்ந்து செல்லவும் பயிற்சி அளித்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்.[4] எலிகளுடனான இந்தப் பணி தனக்கு இயற்கையாகவே வந்தது என்று பிளாக் கூறினார். தனியார் இடங்களில் எலிகளைப் பிடிப்பதில் பல்வேறு வேலைகளை இவர் மேற்கொண்டு சம்பாதித்தார். மேலும் எலி-கடிக்கும் போட்டிகளுக்காக எலிக் குட்டிகளை எலிகளை வழங்கினார். விக்டோரியா காலத்தில் நாய்களைக் கொண்டு எலிகளைக் கொல்லக்கூடிய போட்டிகளில் எலிகளை வழங்கும் பணிகளைச் செய்தார்.[5]
ஜேக் பிளாக்கின் கண்கவர் ஆடை குறித்து இலண்டன் லேபர், இலண்டன் பூவரில் என்றி மேத்யூ எழுதியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இங்கிலாந்தின் எலிகளுக்கு எதிரான இவரது கொடூரமான, கிட்டத்தட்ட ஆபத்தான செயல்களைப் பற்றி மேவுவிடம் பிளாக் கூறினார். "தன்னை எலிகள் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கடித்ததாகவும், மேலும் பெயரிட முடியாத இடத்திலும் கூட எலிகள் கடித்ததாகவும்" பிளாக் பேட்டியின் போது கூறினார்.[6][7] இவர் எலி மாமிசத்தை "தனது மனைவிக்குத் தெரியாமல்" சுவைத்ததாகவும், "முயல்களைப் போல எலியின் மாமிசம் ஈரமாகவும், மிகவும் சுவையாகவும் இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.[7]
எலிகளை முகர்ந்து பார்க்க பெரட் எனப்படும் கொல்லைப்படுத்தப்படும் விலங்குகளுக்குப் பயிற்சி அளிப்பதும், எலிகள் மீது நாய்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிளாக்கின் சிறப்புத் தந்திரச் செயலாகும். ரக்கூன், பாலி என்ற பேட்ஜர், குரங்கு எனப் பல்வேறு விலங்குகளை இதில் பரிசோதனை செய்தார். ஆனால் இவைகளினால் "அதிகம் பயனில்லை" என்று கூறினார்.[8] எலிகளைக் கொல்வதைத் தவிர, பிளாக் மீன்பிடித்தல், பறவைகளைப் பிடித்தல், போலி உயிரி ஆக்குதல் செயல்களிலும் ஈடுபட்டார். மேலும் குறிப்பாக நாய் இனப்பெருக்கத்தில் குறிப்பிட்ட அளவில் சாதித்துள்ளார்.[9] எலிகளைக் கொல்லும் செய்யும் தனது கருப்பு பழுப்பு நிற டெரியர் பில்லி, "இலண்டனில் உள்ள மிகப்பெரிய நாய்" என்றும், நகரத்தில் "சிறிய கருப்பு பழுப்பு நிற நாய்களின் மிகப்பெரிய பகுதியை" பெற்றதாகவும், இந்நாய் "இலண்டனில் ஆடம்பரமான ஒன்று என்று அனைவருக்கும் தெரிந்ததாகவும்" ஜேக் கூறினார். இதேபோன்ற ஒரு நாயை ஆத்திரிய தூதருக்கு பதினான்கு பவுண்டுகளுக்கு விற்றதாகவும் கூறினார்.[9]
வழக்கத்திற்கு மாறான வண்ண எலிகளைப் பிடித்தபோது, புதிய வண்ண வகைகளை நிறுவுவதற்காக அவற்றை வண்ணப்படுத்தினார். தனது வீட்டில் வளர்க்கப்பட்ட எலிகளை வண்ண பட்டைகளால் அலங்கரித்து, அவற்றைச் செல்லப்பிராணிகளாக விற்றார். முக்கியமாக நன்கு வளர்க்கப்பட்ட இளம் பெண் எலிகளை அணில் கூண்டுகளில் வழக்கச் சொன்னார். பீட்ரிக்சு பாட்டர் இவரது வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்ததாக நம்பப்படுகிறது, மேலும் இவர் சாமுவேல் விசுகர்சு என்ற புத்தகத்தைத் தனது எலிக்கு அர்ப்பணித்தார்.[10] அரசவைப் பெண்கள் எலிகளை அழகான மின்னும் கூண்டுகளில் வைத்திருந்தனர். மேலும் விக்டோரியா மகாராணி கூட எலிகளை வளர்த்துவந்தார். இச்செயல்களின் மூலம் வளர்க்கப்படக்கூடியன ஆடம்பரமானவை எலிகள் என்பது நிறுவப்பட்டன.
ஆடம்பர எலிகள்
[தொகு]1840 மற்றும் 1860களில் ஜேக் பிளாக் எலிகளைச் செல்லப்பிராணிகளாக விற்பனை செய்தது எலிகளை வளர்ப்பு மற்றும் செல்லப்பிராணியாகப் பரவலான ஏற்றுக்கொள்ளலில் பங்கு வகித்தது. இவர் எலிகளின் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்தார். இத்தகைய வண்ணமயமான எலிகள் அலங்கார எலிகள் என்று அறியப்பட்டன.[11] 1869-ல், சார்லசு பாட்லேர் தனது கவிதைத் தொகுப்பான லு ஸ்ப்லீன் டி பாரிசில் எலியை "ஏழைக் குழந்தையின் பொம்மை" என்று அழைத்தார். 1901-ல் எலிகள் செல்லப்பிராணிகளாக மிகவும் பிரபலமாக இருந்தன. மேரி டக்ளசு இங்கிலாந்தின் தேசியச் சுண்டெலி குழுமத்தைத் தனது செல்ல எலிகளைக் கொண்டு 24 அக்டோபர் 1901 அன்று அய்லஸ்பரி நகர காட்சியில் ஒரு கண்காட்சி நடத்தினார். இவரது கருப்பு மற்றும் வெள்ளை தலைமுடியுடன் கூடிய ராட்டஸ் நோர்வேஜிகசு "பெஸ்ட் இன் ஷோ" விருதை வென்றார், மேலும் ராட் ஃபேன்சி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 வரை தேசியச் சுண்டெலி மற்றும் எலி குழுமத்தின் ஒரு பகுதியாக எலிக் கண்காட்சி நடைபெற்றது. 1976ஆம் ஆண்டில் தேசிய அலங்கார எலி குழுமம் உருவானதன் மூலம் நவீன எலி அழகு கண்காட்சிப் புத்துயிர் பெற்றது. மேலும் ஆடம்பரமான அழகான எலி என்பது உலகம் முழுவதும் பரவியது. இப்போதெல்லாம், அழகான எலிகள் செல்லப்பிராணிகளாகவும் காட்சி விலங்குகளாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mayhew, Henry (1851). "Chapter I: The Destroyers of Vermin". London Labour and the London Poor, Volume 3. (scan)
- 1 2 .
- ↑ Braun, Adee (2013-05-27). "Her Majesty's Rat-Catcher". Roundtable (in ஆங்கிலம்). Retrieved 2024-08-21.
- ↑ Indy Staff (2009-12-05). "Ancient Origins of Pet Rats". The Santa Barbara Independent (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-21.
- ↑ .
- ↑ Mayhew, Henry (1851). "Chapter I: The Destroyers of Vermin". London Labour and the London Poor, Volume 3. (scan)
- 1 2 Braun, Adee (2013-05-27). "Her Majesty's Rat-Catcher". Roundtable (in ஆங்கிலம்). Retrieved 2024-08-21.
- ↑ Braun, Adee (2013-05-27). "Her Majesty's Rat-Catcher". Roundtable (in ஆங்கிலம்). Retrieved 2024-08-21.
- 1 2 Mayhew, Henry (1851). "Chapter I: The Destroyers of Vermin". London Labour and the London Poor, Volume 3. (scan)
- ↑ .
- ↑ Royer, Nichole. "The History of Fancy Rats".